டான் திரைப்படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் சிவகார்த்திகேயன்.! வைரலாகும் வீடியோ..

தொலைக்காட்சியில் தொகுப்பாளராக நீண்ட காலங்களாக பணியாற்றி வந்த அதன் மூலம் தனது பேச்சுத் திறமையினால் வளருது ஒட்டுமொத்த சினிமா நட்சத்திரங்களையும் கவர்ந்தவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவரின் பேச்சு திறமையினாலும்,காமெடி திறமையினாலும் தமிழ் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது.

கிடைத்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொண்டு தொடர்ந்து ஏராளமான காமெடி திரைப்படங்களில் நடித்து வந்த இவர் தற்போது உச்ச நட்சத்திரமாக ஒரு முன்னணி நடிகர் எப்படி எல்லாம் திரைப்படங்கள் நடிப்பாரோ அதேபோன்ற வாய்ப்புகளை பெற்று மிகவும் பிஸியாக இருந்து வருகிறார்.

இவ்வாறு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்போது டான் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அமோக வரவேற்பினை பெற்று வருகிறது.

இந்த திரைப்படத்தின் தொடர்ந்து இன்று நேற்று நாளை திரைப்படத்தை இயக்கிய ரவிக்குமார் இயக்கத்தில் தயாராகியுள்ள அயலான் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார்.இத்திரைப்படமும் ரிலீஸுக்கு ரெடியாக இருந்து வருகிறது இத்திரைப்படத்தில் போஸ்ட் ப்ரோமோஷன் வேலைகளில் மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பிறகு அனுதீப் இயக்கத்தில் sk20, ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் sk 21 ஆகிய திரைப்படங்களில் அடுத்தடுத்து நடித்து வருகிறார். டான் திரைப்படத்தினை லைகா புரோமோஷன்ஸ் மற்றும் சிவகார்த்திகேயன் புரோமோஷன் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்தை அறிமுக இயக்குனர் சிபிசக்கரவர்த்தி இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது  இதனை தொடர்ந்து பிரபல இசையமைப்பாளர் அனிருத் இசையமைத்துள்ளார், ஹீரோயினாக பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

மேலும் எஸ் கே சூர்யா,  சூரி, முனிஸ்காந்த், காளி வெங்கட், பாலா சரவணன், RJ விஜய்,  சிவகங்கை உள்ளிட்டவர்கள் முக்கிய வேடத்தில் நடித்து உள்ளார்கள்.  இவர் மிகுந்த எதிர்பார்ப்புடன் வெளியாகி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வரும் நிலையில் பல இடங்களில் சிறப்பான காட்சிகள் நடைபெற்றுள்ளன சென்னையில் பிரபல திரையரங்கில் நடைபெற்ற சிறப்பு காட்சியில் ரசிகர்களுடன் சிவகார்த்திகேயனும்  இணைந்து கண்டு மகிழ்ந்துள்ளார். அதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகி வருகிறது.