தனுஷ் நடிக்க இருந்த படத்தை கைப்பற்றிய நடிகர் சிவகார்த்திகேயன் – அந்த படத்தின் இயக்குனர் யார் தெரியுமா.?

dhanush and sivakarthikeyan
dhanush and sivakarthikeyan

நடிகர் தனுஷ் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நாயகனாக மாறி உள்ளார். காரணம் சினிமாவில் சிறப்பான நடிப்பு மற்றும் நல்ல கதைகளுமே தன்னை உச்சத்திற்கு கொண்டு செல்லும் என்பதை சரியாக புரிந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் சினிமாவில் சைலண்டாக இருப்பதால் தற்போது அனைவருக்கும் பிடித்துப் போன நடிகராக உள்ளார்.

மேலும் இவரது திரைப்படங்கள் சமீபகாலமாக சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது வசூல் வேட்டையும் சிறப்பாக நடத்துவதால் தற்போது சம்பளத்தை உயர்த்திக் கொண்டு நடிக்க ரெடியாக இருக்கிறார். தனுஷ் தமிழ் சினிமாவையும் தாண்டி ஹிந்தி, ஹாலிவுட் என பிற மொழிகளிலும் கால்தடம் பதித்து வெற்றியை கண்டு வருகிறார்.

தற்போது தமிழில் மாறன், திருச்சிற்றம்பலம், நானே வருவேன் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்தும் நடித்துக் கொண்டும் வருகிறார் இப்படி இருக்கின்ற நிலையில் தமிழ் சினிமாவில் யாரும் எதிர்பார்க்காத ராட்ச்சன் திரைப்படத்தை கொடுத்து மக்களின் கவனத்தை ஈர்த்தவர் இயக்குனர் ராம்குமார்.

இவரது புதிய படத்தில் தனுஷ்  நடிக்க உள்ளார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வந்த நிலையில் திடீரென தற்போது தனுஷ் இதிலிருந்தே மாற்றப்பட்டு உள்ளார் என செய்திகள் பரவுகின்றன ராம்குமார் இயக்கும் இந்த படத்தில் தனுஷுக்கு பதிலாக நடிக்க உள்ளவர் சிவகார்த்திகேயன் என்ற தகவல் வெளியாகி உள்ளது மேலும் இந்த திரைப்படம் sci – fi திரைப்படமாக உருவாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு டைட்டிலாக “வால்நட்சத்திரம்” என பெயர் சூட்டப்பட்டுள்ளது. தனுஷ் தான் சிவகார்த்திகேயனை வளர்த்து விட்டார் என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் ஆனால் தற்போது தனுஷ் திரைப்படத்தை சிவகார்த்திகேயன் கைப்பற்றி உள்ளது. பலருக்கும் ஆச்சர்யத்தை கொடுத்துள்ளது