பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பல நிகழ்ச்சிகள் சினிமாவில் பிரபலமடைவதற்கு ஒரு நல்ல வாய்ப்பாக அமைகிறது. அந்த வகையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரைக்கு அறிமுகமானவர் சிவகார்த்திகேயன்.
இவரின் சிறந்த காமெடி திறமையினாலும் பேச்சு திறமையினாலும் பட்டி தொட்டியெங்கும் பிரபலமடைந்தார் .எனவே போட்டியாளராக கலந்து கொண்ட இவருக்கு விஜய் டிவியில் தொகுப்பாளராக பணியாற்ற வாய்ப்பு கிடைத்தது. கிடைத்த வாய்ப்புகளை மிகவும் சரியாக பயன்படுத்திக் கொண்டு அவார்டு பங்க்ஷன் போன்றவற்றில் பணியாற்றி வந்தார்.
அதன் பிறகு வெள்ளித்திரையில் காமெடி திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து வந்தார்.இதன் மூலம் பிரபலமடைந்த இவர் தற்போது முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். சினிமாவில் இரண்டாம் கட்ட ஹீரோக்களில் சிவகார்த்திகேயனும் ஒருவர்.
இவ்வாறு இவர் பிரபலமடைந்த இருந்தாலும் இவர் சின்னத்திரையில் மூலம் தான் வெள்ளித்திரைக்கு அறிமுகமானதால் நன்றியை மறக்காமல் தொடர்ந்து சின்னத்திரையிலும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வருகிறார். இப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் எந்த அளவிற்கு பிரபலமடைந்துள்ளாரோ அதே அளவிற்கு அவரின் மகளும் பிரபலமடைந்து உள்ளார்.
இந்நிலையில் இவர் சன் டிவியில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் பொழுது இவரின் மகளை பற்றி பல கேள்விகளை தொகுப்பாளர்கள் கேட்டார்கள் அதற்கு மிகவும் ஜாலியாக பதில் சொல்லியுள்ளார் சிவகார்த்திகேயன் அந்த வீடியோ தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.