மாநாடு திரைப்படம் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் வெளியிட்ட ட்விட்..! கோபமான நடிகர் பிரேம்ஜி..!

sivakarthi-1
sivakarthi-1

சமீபத்தில் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வெளியான திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி அவர்கள்தான் தயாரித்திருந்தார் மேலும் இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா இசை அமைத்துள்ளார்.

இவ்வாறு உருவான இந்த திரைப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடிகை கல்யாணி பிரியதர்ஷன் நடித்தது மட்டுமில்லாமல் வில்லன் கதாபாத்திரத்தில் எஸ்ஜே சூர்யா நடித்து இருந்தார்.  அதுமட்டுமில்லாமல் சந்திரசேகர் மகேந்திரன் மனோஜ் பாரதிராஜா பிரேம்ஜி ஆகியோர்களும் இந்த திரைப்படத்தில் நடித்துள்ளார்கள்.

இவ்வாறு உருவான இந்த திரைப்படம் தீபாவளியை முன்னிட்டு வெளியாகும் என நினைத்த நிலையில் இந்த திரைப்படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டது.  அந்த வகையில் இந்த திரைப்படம் நவம்பர் 25 ஆம் தேதி வெளியிட இருந்த நிலையில் மறுபடியும் ரிலீஸ் குறித்த பிரச்சனை ஏற்பட்டது.

பின்னர் தயாரிப்பாளர் பேச்சுவார்த்தை நடத்தியதன் காரணமாக என்ஓசி வழங்கப்பட்டு இந்த திரைப்படம் திரையில் வெளியிடப்பட்டது அந்தவகையில் ரசிகர்களுக்கான சிறப்பு காட்சி மறுக்கப்பட்டு இந்த திரைப்படம்  7.3௦ மணி அளவில் தியேட்டரில் திரையிடப்பட்டது.

அந்த வகையில் அதிகாலையில் இருந்தே பட்டாசு பாலாபிஷேகம் என மாஸ் காட்டி வந்த ரசிகர்களுக்கு சிறப்பு நிகழ்ச்சிகள் ரத்து செய்ததால் அதன் பிறகு படத்தின் டைட்டில் முதல் அமைதியாக உட்கார்ந்து ஒவ்வொரு நொடியையும் மிகவும் ரசித்து இந்த திரைப்படத்தை பார்த்து உள்ளார்கள்.

அந்தவகையில் நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் மாநாடு திரைப்படம் குறித்து சிம்பு, வெங்கட்பிரபு, எஸ்ஜே சூர்யா என அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்து வந்தார்.  அப்போது பிரேம்ஜி பெயரை மட்டும் மறந்ததன் காரணமாக பிரேம்ஜி நான் சார் என பதிவிட்டு இருந்தார்.

இதற்கு பதிலளித்த நடிகர் சிவகார்த்திகேயன் நீங்களும் வெங்கட்பிரபுவும் ஒன்றுதானே உங்களை என்னால் பிரித்துப் பார்க்க முடியாது ஆகையால் நான் செய்தது தவறா என சிவகார்த்திகேயன் கேட்டது  ரசிகர் மத்தியில் வைரலாக பரவி வருகிறது.