actor sivakarthikeyan tweet about thalapathy 65 ! video viral: வெள்ளித்திரையில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் இளையதளபதி விஜய்.
இவர் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மாஸ்டர் என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த படத்தின் டீசர் தீபாவளி அன்று மாலை 6 மணி அளவில் வெளியிடப்பட்டது. மேலும் அந்த இந்த படம் பொங்கலை முன்னிட்டு வெளியிடப்படும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.
இந்நிலையில் தளபதி 65 வது படத்தை எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்பது சமூக வலைதள பக்கங்களில் மிகப்பெரிய கேள்வியாக இருந்தது.
மேலும் நேற்று அதிகாரப்பூர்வமாக நெல்சன் தான் தளபதி 65 ஆவது திரைப்படத்தை இயக்க போகிறார் என்று தெரியவந்துள்ளது.
இயக்குனர் நெல்சன் இதற்கு முன்பே நயன்தாராவை வைத்து கோலமாவு கோகிலா வும் சிவகார்த்திகேயனை வைத்து டாக்டர் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை.
இதனை அடுத்து வளர்ந்துவரும் இயக்குனருக்கு தளபதி வாய்ப்பு கொடுத்துள்ளதால் தளபதிக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் தளபதிக்கு நன்றியை தெரிவித்துள்ளார்.
இதோ அவர் தெரிவித்த நன்றி.
Extremely happy for you Nelson na🤗🤗my brother with big dreams joining big names👏👏👍😊😊Best wishes to @actorvijay sir, @sunpictures and my dear @anirudhofficial 🙏🙏🙏 https://t.co/3dFDCbppqM
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 10, 2020