தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவர் சமீபத்தில் மேல் செந்தில்குமார் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படம் ஆனது வசூல் ரீதியாகவும் சரி மன ரீதியாகவும் சரி நல்ல வரவேற்பை பெற்று தந்தது மட்டுமில்லாமல் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் பிரியங்கா மோகன் இருவரும் இணைந்து சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் டான் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்கள். இவர் இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புகள் முழுமையாக முடிவடைந்த நிலையில் தற்போது டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது.
மேலும் இத் திரைப்படம் வெளிவந்த பிறகு நடிகர் சிவகார்த்திகேயன் எந்த திரைப்படத்தில் நடிக்கப் போகிறார் என்ற செய்தி ரசிகர்கள் மத்தியில் மிக ஆவலுடன் இருந்து வருகிறது. அந்த வகையில் தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாக உள்ள ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவ்வாறு இரண்டு மொழிகளில் உருவாகும் இந்த திரைப் படத்திற்கு இசையமைப்பாளராக இயக்குனர் தமன் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் இவர் ஏற்கனவே தளபதி66 படத்தில் இசை அமைப்பாளராக பணியாற்றி வருகிறார். என்று கூறப்படுகிறது.
பொதுவாக தலபதி திரைப்படத்தில் பணியாற்றும் ஒவ்வொரு பிரபலங்களும் திறமை வாய்ந்தவர்களாக தான் இருப்பார்கள் அந்த வகையில் முதன் முதலாக தளபதி திரைப்படம் கூட்டணியுடன் சிவகார்த்திகேயன் இணைவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.