தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பதையும் தாண்டி பன்முகத் திறமைகளை கொண்டவராக விளங்கும் நிலையில் தற்போது இவர் கிரிக்கெட் வீரர் நடராஜனின் வாழ்க்கை வரலாற்றை இயக்கி நடிக்க உள்ளார் என்று தகவல் ஒன்று வெளியாகியுள்ள நிலையில் தற்போது அது ரசிகர்கள் மத்தியில் பெரிதும் ஆச்சிரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
அதாவது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கும் சிவகார்த்திகேயன் சின்னத்திரையின் மூலம் சினிமாவிற்கு அறிமுகமாகி பிறகு வெள்ளித்திரையிலும் காமெடி திரைப்படங்களில் நடித்து வந்து தற்போது திர்லர் திரைப்படங்களில் நடித்து கலக்கி வருகிறார். இந்நிலையில் தற்பொழுது மண்டேலா படத்தினை இயக்கிய அஸ்வின் இயக்கம் மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
இவருடைய நடிப்பில் வெளிவந்த டாக்டர், டான் போன்ற திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது இப்படிப்பட்ட நிலையில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறவில்லை எனவே தற்போது நடித்துக் கொண்டிருக்கும் மாவீரன் திரைப்படம் மீண்டும் தன்னை வெற்றிப் பாதைக்கு கொண்டு வரும் என்ற எதிர்பார்ப்பில் இருந்து வருகிறார் சிவகார்த்திகேயன்.
இந்த படத்தினை அடுத்து ராஜ்கமல் ஃபிலிம் சார்பாக கமல் தயாரிக்கும் ஒரு படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் எனவே தற்பொழுது வெளிவந்த தகவலின் படி சிவக்கார்த்திகேயன் இயக்குனராக அவதாரம் எடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. அதாவது தமிழ்நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர் டி.நடராஜனின் வாழ்க்கை வரலாற்றில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என்ற செய்தி கடந்த சில மாதங்களாக கூறப்பட்டு வருகிறது.
இதனை அடுத்து தற்பொழுது டி.நடராஜன் தெரிவிக்கையில், தான் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு என் வாழ்க்கை வரலாற்றை சிவகார்த்திகேயன் இயக்க உள்ளார் என தெரிவித்தார் இதனை அடுத்து சிவகார்த்திகேயன் நடராஜனின் வாழ்க்கை வரலாற்று படத்தை இயக்கி நடிக்க இருக்கிறார் என கூறப்படுகிறது விரைவில் இதனை பற்றி அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.