ஹிட்டுக்காக காதலர் தினத்தை குறிவைக்கும் நடிகர் சிவகார்த்திகேயன்..! நம்ம டான் பாச்சா பலிக்குமா..?

don-1
don-1

சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் டாக்டர் இந்த திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் அவர்கள் இயக்கியது மட்டுமில்லாமல் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல நடிகை பிரியங்கா மோகன் நடித்துள்ளார்.

இவ்வாறு வெளிவந்த இந்த திரைப்படமானது ஒரு காமெடி கலந்த ஆக்ஷன் திரைப்படமாக அமைந்ததன் காரணமாக இத்திரைப்படம் சுமார் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்து மிகப்பெரிய சாதனையை படைத்தது மட்டுமில்லாமல் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் மற்றும் டான் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். மேலும் இந்த டான்  திரைப் படத்திலும் கதாநாயகியாக நடிகை பிரியங்கா மோகன் தான் நடித்துள்ளார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை அட்லீயிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிபிசக்கரவர்த்தி அவர்கள் தான் இயக்கிய உள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில்  எஸ் ஜே சூர்யா மற்றும் சமுத்திரகனி, சிவாங்கி ,பாலா, சரவணன், ஆர்ஜே விஜய்,  போன்ற பல்வேறு நட்சத்திரங்கள் நடிக்கும் இந்த திரைப்படத்திற்கு இசை அனிருத் மூலமாக இசை அமைக்கப்பட்டுள்ளது.

முதலில் இந்த திரைப்படமானது இந்த ஆண்டு வருகின்ற கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழுவினர் முடிவு செய்திருந்தார்கள் அந்த வகையில் பெரிய பட்ஜெட்டில் உருவாகும் பல திரைப்படங்கள் அப்போது வெளியாகி அதன் காரணமாக இத் திரைப்படம் பிப்ரவரி மாதம் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியிடலாம் என படக்குழுவினர்கள் முடிவு செய்துள்ளார்களாம்.