பல நாட்களுக்குப் பிறகு சூப்பர் ஸ்டார் ரஜினி போல் பேசி அசத்திய சிவகார்த்திகேயன்.!! அசத்தலான வீடியோ இதோ.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் நகைச்சுவை நடிகனாக காலடி எடுத்து வைத்து பின்பு பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்து ஏரால ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்து வைத்திருப்பவர் தான் சிவகார்த்திகேயன்.

இவர் முதன்முதலில் விஜய் டிவியில் மிமிக்கிரி செய்து ரசிகர்களிடையே புகழ்பெற்று விளங்கினார் பின்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்,தளபதி விஜய்,சூர்யா,தனுஷ், விஜயகாந்த் என பல நடிகர்களின் குரலில் பேசி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார்.

இதனையடுத்து சிவகார்த்திகேயன் நிறைய நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றாலும் அங்கு மிமிக்கிரி செய்வதை தவிர்த்து விட்டார் இந்நிலையில் ஒரு கல்லூரி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டுள்ள அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை போல பேசி அசத்தியுள்ளார்.

மேலும் அப்போது எடுக்கப்பட்ட வீடியோ காணொளி தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருவது மட்டுமல்லாமல் இந்த வீடியோ காணொளியை இவரது ரசிகர்கள் இணையதளத்தில் ஷேர் செய்து வருகிறார்கள்.

இதோ அந்த வீடியோ காணொளி.