நான் ரஜினியோட “ஜெராக்ஸ்” மேடையில் உண்மையை உலறிய நடிகர் சிவகார்த்திகேயன்.. அதிர்ச்சியான ரசிகர்கள்

sivakarthikeyan-
sivakarthikeyan-

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக திகழ்வர் சிவகார்த்திகேயன். இவர் ஆரம்பத்தில் காமெடி கலந்த படங்களில் நடித்து வந்த நிலையில் சமீப காலமாக ஆக்சன் படங்களிலும் நடிப்பதால் இவருடைய வெற்றி சதவீதம் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது கடைசியாக இவர் நடித்த டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடிக்கு மேல் அள்ளி சாதனை படைத்தது.

அதனை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் நடித்து வருகிறார் கைவசம் அயலான், மாவீரன், சிவகார்த்திகேயன் 24 ஆகிய படங்கள் இருக்கின்றன இதில் முதலாவதாக மாவீரன் திரைப்படம் வெளியாக இருக்கிறது இந்த படம் முழுக்க முழுக்க காமெடி, action கலந்த திரைப்படமாக உருவாகி உள்ளதாம்..

படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஷ்கின், யோகி பாபு, சுனில், கவுண்டமணி, சரிதா மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்துள்ளனர். நடிகர் சிவகார்த்திகேயன் தனது படங்களையும் தாண்டி மற்ற படங்களின் இசை வெளியீட்டு விழா, விருது விழா போன்றவற்றில் கலந்து கொள்வது வழக்கம்.

அப்படி அண்மையில் கௌதம் கார்த்திக் நடிப்பில் உருவாகியுள்ள ஆகஸ்ட் 16 1947 படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார் அப்பொழுது பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் நடிகர் கெளதம் கார்த்தி மற்றும் அவரது அப்பா குறித்து வெளிப்படையாக பேசி உள்ளார் அதில் அவர் சொன்னது என்னவென்றால்.. கார்த்தி சார் எந்த ஒரு நடிகரின் உடல் மொழியையும் வைத்துக் கொள்ளாத நடிகர்களில் ஒருவர்..

ஏன் அதற்கு நானே ஒரு உதாரணம் நாம் பாதி ரஜினி உடல் மொழியை கொண்டு இருக்கிறேன் ஆனால் கார்த்தி சார் அப்படி கிடையாது தனக்கென்று தனி உடல் மொழியை உருவாக்கி வைத்துள்ளார் என மேடையில் கலகலவென பேசி முடித்தார் சிவகார்த்திகேயன். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியா பக்கத்தில் படும் பைரல் ஆகி வருகிறது.