தனது சினிமா பயணத்தை ஆரம்பத்தில் இருந்து இப்போது வரை வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு நல்ல இடத்தை பிடித்திருப்பவர் ஓடுவர் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் அண்மையில் நடித்த டாக்டர், டான் போன்ற படங்களும் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது அதனைத் தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன்.
நடித்த பிரின்ஸ் திரைப்படம் கடந்த தீபாவளியை முன்னிட்டு வெளியானது. இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு இல்லாததால் கலவையான விமர்சனத்தை பெற்று வசூலில் மரண அடி வாங்கியது. இதிலிருந்து மீண்டு வர நடிகர் சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் உடன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் கதாநாயகியாக அதிதி ஷங்கர் நடித்து இருக்கிறார்.
மேலும் அயலான், SK 24 படங்களும் கைவசம் இருகின்றன. இந்த படங்கள் வெற்றி பெரும் பட்சத்தில் சிவகார்த்திகேயனின் மார்க்கெட் அதிகரிக்கும் மேலும் தனது சம்பளத்தையும் கணிசமாக உயர்த்தி உள்ளார். இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயன் முதல் படமான மெரீனா படத்தில் நடித்ததற்காக வாங்கிய சம்பளம் எவ்வளவு என்பது குறித்து தற்பொழுது தகவல் வெளிவந்துள்ளது அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்..
சின்னத்திரையில் தொடர்ந்து பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியும், காமெடியனாகவும் பிரபலமடைந்த சிவகார்த்திகேயன் வெள்ளி திரையில் முதலில் பாண்டியராஜ் இயக்கத்தில் உருவான மெரினா திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து அறிமுகமானார். இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஓவியா நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
நடிகர் சிவகார்த்திகேயன் முதல் திரைப்படமான மெரினா திரைப்படத்தில் நடித்ததற்காக 10,000 ரூபாய் மட்டுமே சம்பளமாக வாங்கிய உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் தற்பொழுது அவர் 15 கோடிக்கு மேல் சம்பளம் வாங்குவதாக சொல்லப்படுகிறது. இந்த தகவல் இணைய தளத்தில் வைரலாகி வருகிறது.