தாடி மீசை இன்றி தியேட்டரில் திடீர் விசிட்டில் நடிகர் சிவகார்த்திகேயன்..! இணையத்தில் வைரலாகும் புகைப்படம்..!

sivakarthikeyan-2

பல தனியார் தொலைக்காட்சியில்  தொகுப்பாளராக தன்னை அறிமுகப்படுத்தி தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் இவ்வாறு பிரபலமான நமது நடிகர் தற்போது நெல்சன் திலிப்குமர் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.

இவ்வாறு உருவான இத் திரைப்படமானது அக்டோபர் 9ஆம் தேதி திரையில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தது மட்டுமல்லாமல் வசூலிலும் வெளுத்து வாங்கி வருகிறது இந்நிலையில் சிவகார்த்திகேயன் நடித்து கொண்டிருக்கும் அயலன் திரைப்படமும் விரைவில் திரைக்கு வர காத்துக்கொண்டிருக்கிறது.

இந்நிலையில் அயலான் திரைப்படத்தின் post-production வேலையானது மிக விறுவிறுப்பாக நடந்து வரும் வேளையில் தற்போது இவர் நடிக்க இருக்கும் டான் திரைப்படத்தை லைகா புரோடக்சன் மற்றும் சிவகார்த்திகேயன் புரோடக்சன் ஆகிய இரண்டும் இணைந்து தயாரிக்க உள்ளது.

இவ்வாறு உருவாகப் போகும் இந்த திரைப்படத்தை சிபிசக்கரவர்த்தி அவர்கள்தான் இயக்குகிறார் மேலும் அனிருத் இசை அமைப்பாளராக பணியாற்ற உள்ளார் அதேபோல இந்த திரைப்படத்திலும் டாக்டர் திரைப்படத்தில் நடித்த பிரியங்கா மோகன் அவர்கள்தான் கதாநாயகியாக நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மேலும் இந்த திரைப்படத்துக்கான சூட்டிங் வேலைகள் முக்கால்வாசி முடிவடைந்த நிலையில் டப்பிங் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக செய்திகள் வெளியாகி உள்ளன. மேலும் தற்போது அசோக் இயக்கத்தில் ஒரு திரைப்படம் மற்றும் தெலுங்கு இயக்குனரின் திரைப்படம் ஒன்றிலும் இவர் நடிக்க உள்ளாராம்.

அந்தவகையில் அசோக் இயக்கும் திரைப்படத்தில் இவர் இரண்டு கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். அந்த வகையில் டாக்டர் திரைப்படத்தை பார்க்க விஜய் டிவி நட்சத்திரங்கள் சென்னையில் உள்ள ஒரு பிரபல திரையரங்கில் பார்த்துக் கொண்டிருந்தார்கள் அப்பொழுது விசிட் அடிக்க வந்த சிவகார்த்திகேயன் மீசை தாடி எதுவும் இன்றி ஒரு புது கெட்டப்பில் இறங்கியுள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் இது என்ன இவர் நடிக்கப்போகும் டான் திரைப்படத்தின் கெட்டப்பா இல்லை புதிய திரைப் படத்திற்கான கெட்டப்பா என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார்கள்.

sivakarthikeyan-1
sivakarthikeyan-1