விஜய் டிவி பிரபலத்துடன் ஜோடி சேர்ந்து நடிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் – அதுவும் முதல் முறையாக யாருடன் தெரியுமா.?

sivakarthikeyan
sivakarthikeyan

விஜய் டிவி நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட பல பிரபலங்கள் தற்போது சினிமாவில் சிறப்பாக பயணித்து வருகின்றன. ஆம் அந்த வகையில் சினிமாவில் நம்பர் ஒன் காமெடி நடிகராக வலம் வரும் சந்தானம் முதலில் விஜய் டிவி நிகழ்ச்சியின் மூலம் தான் பிரபலமடைந்து வெள்ளித்திரையில் பயணித்தார்.

அவரை அடுத்து தற்போது உள்ள மக்களின் ஃபேவரட் நாயகன் சிவகார்த்திகேயன் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு அறிமுகமாகி பின்பு விஜய் தொலைக்காட்சியில் பல நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி பிரபலமடைந்தவர்.

அந்த வகையில் சிவகார்த்திகேயன் அது இது எது, கலக்கப்போவது யாரு, விஜய் டெலி அவார்ட்ஸ், நடன நிகழ்ச்சி போன்ற பல நிகழ்ச்சிகளை அவர் தொகுத்து வழங்கி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. பின்பு வெள்ளித்திரையில் முதலில் மெரினா திரைப்படத்தில் நடித்து அடுத்தடுத்து சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். மேலும் இவர் நடிகராக மட்டுமல்லாமல் பாடலாசிரியர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகம் கொண்டவர் சிவகார்த்திகேயன் ஆவார்.

இவர் தற்போது டான் திரைப்படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். மேலும் இந்த திரைப்படம் கூடிய விரைவில் திரையரங்கிற்கு வெளிவர உள்ளது. இதனை அடுத்து கமல் தயாரிக்கும் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் ஒரு புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியாகி இருந்த நிலையில் தற்போது சிவகார்த்திகேயனின் இந்த 21 வது படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்க உள்ளாராம்.

மேலும் சாய் பல்லவி விஜய் டிவியில் ஒளிபரப்பான “உங்களில் யார் அடுத்த பிரபுதேவா” என்ற நடன நிகழ்ச்சியில் பங்குபெற்றதன் மூலம் பல ரசிகர்களிடையே பிரபலம் அடைந்தவர் ஆவார். தற்போது விஜய் டிவி பிரபலங்களான சிவகார்த்திகேயன் மற்றும் சாய்பல்லவி இருவரும் முதல் முறையாக இணைந்து நடிப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.