விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் போட்டியாளராக அறிமுகமாகி தற்போது தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்த வருபவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவர் நடிப்பில் கடைசியாக ஹீரோ திரைப்படம் வெளிவந்து பெரிதாக வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து தற்போது இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படம் வெளியாக உள்ளது. இத்திரைப்படம் மே மாதம் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என்று கூறியிருந்தார்கள்.
ஆனால் தற்பொழுது கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதனால் OTT-யில் வெளியாகும் என்றும் பிரபல OTT நிறுவனம் ஒன்றுக்கு 42 கோடிக்கு விற்று விட்டதாகவும் கூறியிருந்தார்கள். ஆனால் இதுவரையிலும் சரியான அதிகாரபூர்வமான தகவல் வெளி வரவில்லை.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து டான் மற்றும் பிரபல இயக்குனர் அட்லீயின் உதவி இயக்குனரான அசோக் இயக்கும் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார். இந்த இரண்டு திரைப்படங்கலிலும் ஒரே நேரத்தில் நடித்து வருகிறார்.
அதுமட்டுமல்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளாக இளம் இயக்குனர் ஒருவரின் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காக அவருக்கு ஐஸ் வைத்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
அந்த வகையில் முன்னணி நடிகரான துல்கர் சல்மான் மற்றும் vj ரக்ஷான் இவர்கள் நடிப்பில் வெளிவந்து இளசுகளின் மத்தியில் மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால். இந்தத் திரைப்படம் மிகவும் விறுவிறுப்பாகவும், பல எதிர்பார்ப்புகளுடனும்,காதல் காட்சிகளும் அமைந்து இருந்ததால் தற்பொழுது உள்ள இளைஞர்களுக்கு பிடித்தது எனவே நல்லா வரவேற்பைப் பெற்றிருந்தது.
அதுமட்டுமல்லாமல் பல திரை பிரபலங்களும் இத்திரைப்படத்தை புகழ்ந்து தள்ளினார்கள். இத்திரைப்படத்தை இயக்கியவர் தேசிங்கு பெரியசாமி. இவர் திரைப்படத்தில் நடிக்க வேண்டும் என்பதற்காகத் தான் சிவகார்த்திகேயன் அட்வான்சாக கொஞ்சம் பணம் கொடுத்து புக் செய்துள்ளாராம்.
ஆனால் தேசிங்கு பெரியசாமி ரஜினிகாந்தை வைத்து திரைப்படம் இயக்க வேண்டும் என்பதற்காக எதிர் பார்த்து வருகிறார். இதனை அறிந்த ரசிகர்கள் ஒரு திரைப்படம் இயக்கி வெற்றி பெற்றதற்கு இப்படி எல்லாம் செய்வது கொஞ்சம் ஓவரா இல்லையா சிவகார்த்திகேயன் என்று கூறி வருகிறார்கள்.