Sivakarthikeyan Net worth: சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் முன்னணி நடிகராக கலக்கி வரும் சிவகார்த்திகேயனின் மொத்த சொத்து மதிப்பு குறித்து பார்க்கலாம். மிமிக்ரி ஆர்டிஸ்ட் ஆக சின்னத்திரைக்கு அறிமுகமான சிவகார்த்திகேயன் தன்னுடைய பேச்சு திறமையைினால் தொகுப்பாளராக ஒட்டுமொத்த ரசிகர்கள் மனதிலும் இடம் பிடித்தார்.
இதன் மூலம் சினிமா நிகழ்ச்சிகள், விருது வழங்கும் விழாக்கள் போன்றவற்றை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது போன்ற பெரிய நிகழ்ச்சிகளில் முன்னணி நடிகர்கள் தொகுப்பாளர் சிவகார்த்திகேயன் என்றாலே இவனா என நினைப்பதுண்டு.
மாயா-கமலுக்கு இடையே இருக்கும் டீலிங் என்ன.? சூனியக்காரி குடும்பத்தை பார்த்து பயப்படுகிறாரா ஆண்டவர்?
அந்த வகையில் சிவகார்த்திகேயனை நீதான் ஹீரோ ஆயிட்டில இன்னும் என்னடா இங்க பண்ற என விஜய் ஜாலியாக பேசியிருந்த காட்சிகளையும் பார்த்து இருக்கிறோம். இவ்வாறு மெல்ல மெல்ல எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் உயர்ந்தவர் தான் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயனை சினிமாவுக்குள் கொண்டு வந்தது தனுஷ் தான்.
அதாவது தனது 3 திரைப்படத்தில் சிவகார்த்திகேயனை காமெடியனாக வைத்துக் கொண்டார். அதன் பிறகு மனம் கொத்தி பறவை, எதிர்நீச்சல் போன்ற படங்கள் திருப்புமுனையாக அமைந்தது முக்கியமாக வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற படங்கள் தான் பட்டித்தொட்டி எங்கும் பிரபலமானது.
எனவே தனது சிறப்பான நடிப்பின் மூலம் காமெடி ஹீரோவாக மட்டுமல்லாமல் சீரியஸான நடிகராகவும் கலக்கி வருகிறார். இவருடைய நடிப்பில் தற்போது அயலான் படம் உருவாகி இருக்கும் நிலையில் அடுத்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் அசுர வளர்ச்சி அடைந்த சிவகார்த்திகேயன் மொத்த சொத்து குறித்து பார்க்கலாம். அதாவது ஒரு படத்தில் நடிப்பதற்காக சிவகார்த்திகேயன் ரூபாய் 35 கோடி வரை சம்பளம் வாங்குகிறாராம். அதோடு மட்டுமல்லாமல் எஸ்.கே புரொடக்ஷன் என்கின்ற தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார். இதில் கனா, டாக்டர், யாழ் போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார்.
பல்வேறு வகையான சொகுசு கார்கள் சென்னை மற்றும் திருச்சியில் ஆடம்பர பங்களா பூர்வீக கிராமத்தில் பிரம்மாண்டமான வீடு ஒன்றையும் சமீபத்தில் கட்டினார். எனவே இவருடைய மொத்த சொத்து மதிப்பு ரூ.110 கோடி இருப்பதாக கூறப்படுகிறது.