ஆக்சன் காட்சிகளில் மிரட்டும் சிவகார்த்திகேயன் – SK 22 படத்தின் டைட்டில் வீடியோ இதோ.!

maveeran
maveeran

நடிகர் சிவகார்த்திகேயன் ஆரம்பத்தில் சின்ன திரையில் தனது பயணத்தை தொடங்கி பிரபலம் அடைந்து பின்பு ஒரு கட்டத்தில் வெள்ளித்திரையில் ஒரு சில படங்களில் துணைக் நடிகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதைத்தொடர்ந்து இவர் ஹீரோவாகவும் நடித்த படங்கள் சூப்பர் ஹிட் அடித்ததை தொடர்ந்து தற்போது டாப் நடிகர்களுக்கு நிகராக  சிறந்த படங்களை கொடுத்து வருகிறார்.

மேலும் இவர் நடிப்பில் அண்மை காலமாக வெளிவரும் படங்கள் ஒவ்வொன்றும் நல்ல வசுலை அள்ளி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் சிவகார்த்திகேயன் டாக்டர், டான் போன்ற படங்களின் வெற்றியை தொடர்ந்து தற்போது பல படங்களில் கமிட் ஆகியுள்ளார். மேலும் அவரை கமிட் செய்ய பல இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் போட்டி போட்டு வருகின்றனர்.

அந்த அளவிற்கு சிவகார்த்திகேயனை வைத்து படம் எடுத்தால் எப்படியும் அந்த படம் ஹிட் அடிக்கும் என இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் கணக்கு போட்டுள்ளனர். தற்போது சிவகார்த்திகேயன் மடோனா அஸ்வின் இயக்கத்தில் பிரின்ஸ் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தில் அவருடன் இணைந்து உக்ரேன் நாட்டு நடிகை மரியா மற்றும் சத்யராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றன. படம் வருகின்ற தீபாவளி அன்று வெளியாகும் என பட குழு திட்டவட்டமாக வெளியிட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மறுபக்கம் சிவகார்த்திகேயன் தமிழ் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் உருவாகி வரும் ஒரு புதிய படத்திலும் நடித்து வருகிறார்.

இந்தப் படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சமீபத்தில் வெளியாகி ட்ரண்ட் ஆகி வருகிறது. இந்த படத்தில் சிவகார்த்திகேயன் இதுவரை இல்லாத புதிய லுக்கில் களம் இறங்கியுள்ளார். மேலும் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் இந்த படத்தில் ஆக்சன் சீன்கள் அதிகம் இருக்கும் என்பது போல் தெரிய வருகிறது. இதோ அந்த படத்தின் டீசர் வீடியோ..