தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனராகவும், நடிகராகவும் வலம் வருபவர் இயக்குனர் செல்வராகவன். இதுவரை பல்வேறு படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். பெரும்பாலான திரைப்படங்கள் வித்தியாசமாக இருப்பதால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தன இதனால் இயக்குனர் செல்வராகவன் அசுர வளர்ச்சியை எட்டினார். மேலும் அவரது தம்பி தனுஷுக்கு அதிகப்படியான படங்களை கொடுத்து அவரையும் வளர்த்துவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் தனுஷின் செல்வராகவனுடன் இணைந்து பணியாற்றிய திரைப்படங்கள் பல.. முதலில் இயக்குனர் செல்வராகவன் துள்ளுவதோ இளமை என்ற திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டார் அதன் பின் இவர் இயக்கிய ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை, செவன் ஜி ரெயின்போ காலனி, மயக்கம் என்ன போன்ற பல்வேறு படங்களை இயக்கியுள்ளார் கடைசியாக கூட இவர் நடிகர் சூர்யாவை வைத்து என் ஜி கே என்ற படத்தை எடுத்து இருந்தார்.
தொடர்ந்து இயக்குனராக பணியாற்றி வந்தார் செல்வராகவன் திடீரென படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் விஜய்யின் பீஸ்ட், கீர்த்தி சுரேஷுடன் சாணி காயிதம் போன்ற பல்வேறு படங்களை கையில் வைத்துள்ளார் மேலும் சிறு இடைவெளிக்குப் பிறகு செல்வராகவன் தனது தம்பி தனுஷை வைத்து நானே வருவேன் என்ற திரைப்படத்தை இயக்க அதிகம் ஆர்வம் காட்டி வருகிறார் இருக்கின்ற நிலையில் செல்வராகவனை பற்றிய ஒரு சுவாரசிய தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.
அதாவது இயக்குனர் செல்வராகவனை இதுவரையிலும் யாராலும் புரிந்து கொள்ள முடியவில்லையாம் மற்ற இயக்குனர்களை காட்டிலும் ஒரு வித்தியாசமான இயக்குனராக சினிமா உலகில் இருப்பதாக கூறப்படுகிறது சொல்லப்போனால் அவருடன் இருக்கும் உதவி இயக்குனர்கள் கூட எப்பேர்பட்ட நிலைமையில் செல்வராகவன் இருக்கிறார் என்பதை கூட சரியாக கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இயக்குனர் செல்வராகவன் படப்பிடிப்பில் தனது உதவி இயக்குனர்களுடன் உட்கார்ந்து சாப்பிடுவது வழக்கம் பேசிக்கொண்டே சாப்பிடுவதால் உதவி இயக்குனர்கள் இவர் சொல்லும் வார்த்தைகளை முதலில் காதில் வாங்கி கொண்ட பிறகுதான் சாப்பிடுவார்களாம் ஆனால் செல்வராகவன் சொல்லிக் கொண்டே சாப்பிட்டுவிட்டு முதலில் போய் விடுவாராம் பின் நீங்கள் எல்லாம் இன்னும் சாப்பிடலையா எனக் கூறி கேள்வியை கேட்டு திக்குமுக்காட வைப்பாராம்.
இதேபோல் அவரது படப்பிடிப்பு ஷூட்டிங் தொடங்கி விட்டால் அந்த நடிகர், நடிகைகளுக்கு முழு கதையையும் சொல்லாமல் சிறிதளவு கதையை மட்டுமே சொல்லி படத்தின் ஷூட்டிங் தொடங்கி விடுவாராம் இதனால் அந்த நடிகர், நடிகைகள் முழு கதை எப்படி என்பதே தெரியாமல் நடித்துக் கொண்டிருப்பார்கள். அதேபோல்தான் ஆயிரத்தில் ஒருவன் திரைப்படத்தில் நடிக்க சிவகார்த்திகேயனை நடிக்க அழைத்துள்ளார். அப்போது சிவகார்த்திகேயன் நடிகர் கிடையாது ஆனால் அந்த எண்ணம் இருந்ததாம்.
அப்போது ஒரு படத்தின் கதையை சிவகார்த்திகேயனுக்கு சிறு ரோல் கொடுக்க அதிக முனைப்புக் காட்டினார் ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயனும் அந்த படத்தில் நடிக்க ரெடி ஆகி விட்டாராம். இரண்டு நாட்களாக கதையை சொல்லாமல் மலை காடுகளில் சுற்றித் திரிய வைத்துள்ளார் மேலும் செல்லும் இடமெல்லாம் சிறப்பாக இருந்துவிட்டால் போதும் உடனடியாக திட்டமே இல்லாமல் ஷூட்டிங்கை நடத்தி விடுவார் இதனை பார்த்து ஒரு கட்டத்தில் சிவகார்த்திகேயன் சொல்லாமலே அங்கிருந்து சைலண்டாக எஸ்கேப் ஆகிவிட்டாராம். ஒரு கட்டத்தில் செல்வராகவன் எங்கே அந்த பையன் என்று கேட்க அவர் இரண்டு நாட்களுக்கு முன்பு போய் விட்டார் என உதவி இயக்குனர் சொன்னாராம்.