தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் சூப்பர் டூப்பர் ஹிட் தான் அந்தவகையில் மெர்சல், தெறி,பிகில் மற்றும் மாஸ்டர் என்று அனைத்து திரைப்படங்களும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளது.
கொரோனா காரணத்தால் உலகமே முடங்கிக் கிடந்தது அந்த வகையில் தியேட்டரிலும் எந்த படமும் ரிலீஸ் ஆகாமல் ஓடிடி வழியாக பல படங்கள் வெளியாகி வந்தது. பிறகு பொங்கலை முன்னிட்டு முதல் முறையாக சில மாதங்கள் கழித்து மாஸ்டர் திரைப்படம் 50% பார்வையாளர்களுடன் வெளியாகி உலகம் முழுவதும் 300 கோடிக்கு மேல் வசூல் சாதனை படைத்தது.
இதனைத் தொடர்ந்து தற்பொழுது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தளபதி 65 திரைப்படத்தை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தளபதி 65 திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது.
இத்திரைப்படத்தில் தளபதி விஜய்க்கு ஜோடியாக தெலுங்கு முன்னணி நடிகை பூஜா ஹெக்டே நடிக்கவுள்ளார். இவரைத் தொடர்ந்து காமெடி நடிகர் யோகிபாபு மற்றும் டிக் டாக் பிரபலம் அபர்ணா தாஸ் உட்பட இன்னும் பல பிரபலங்கள் இத்திரைப்படத்தில் நடிக்க இணைந்துள்ளார்கள்.
இந்நிலையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனும் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் இணையதளத்தில் வைரலானது. அந்த வகையில் சிவகார்த்திகேயன் தளபதி 65 திரைப்படத்தில் இடம்பெற உள்ள பாடலை எழுத உள்ளாராம்.
இதற்கு முன்பே சிவகார்த்திகேயன் அவர் நடித்து வரும் டாக்டர் திரைப்படத்தில் ஒரு பாடல் எழுதி உள்ளார்.அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளிவந்த கோலமாவு கோகிலா திரைப்படத்திலும் ஒரு பாடலை பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.