சித்தி வீட்டிலிருந்து பிரபல நடிகையை சைட் அடித்த சிவகார்த்திகேயன் – அந்த நடிகையை யாருக்கு தான் பிடிக்காது.?

sivakarthikeyan-
sivakarthikeyan-

தமிழ் சினிமா உலகில் தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்து தன்னை மிகப் பெரிய அளவில் உயர்த்திக் கொண்டவர் சிவகார்த்திகேயன் . இவரது படங்கள் பெரிதும் கமர்ஷியல் படங்களாக இருப்பதால் அதில் காமெடி சென்டிமெண்ட் போன்றவை இடம்பெறுகின்றன.

இதனால் ரசிகர்களையும்  தாண்டி மக்களை வெகுவாக அவரது இழுக்கின்றன. அதனால் சிவகார்த்திகேயன் படங்கள் வெற்றியை ஈஸியாக அள்ளுக்கின்றனர். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான டாக்டர், டான் ஆகிய திரைப்படங்கள் 100 கோடி கிளப்பில் இணைந்துள்ளதால் சிவகார்த்திகேயன் செம்ம சந்தோஷத்தில் தனது அடுத்த திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

சிவகார்த்திகேயன் கையில் தற்போது  prince, அயலான் ஆகிய படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என தெரியவருகிறது. அதேசமயம் நடிப்பதையும் தாண்டி நடிகர் சிவகார்த்திகேயன் படங்களை தயாரிப்பது மற்றும் பாடகராக வலம் வருகிறார். மேலும் சினிமாவையும் தாண்டி அவ்வபோது சில உதவிகளையும் சிவகார்த்திகேயன் செய்து வருவதால் தற்போது ரசிகர்களுக்கு பிடித்த நடிகராக சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் பேட்டி ஒன்றில் தனது சின்ன வயது அனுபவத்தை பகிர்ந்துள்ளார். அவர் ஸ்கூல் படித்துக் கொண்டிருக்கும் போது லீவு நாட்களில் தனது சித்தி வீட்டிற்கு செல்வது வழக்கம். சித்தி வீட்டு பக்கத்தில் அருகில் தான் குஷ்புவின் வீடும் இருக்கிறதாம் குஷ்புவின் தீவிர ரசிகராக சிவகார்த்திகேயன் குஷ்பூ எப்பொழுதெல்லாம் வெளி வருகிறாரோ அப்போதெல்லாம் அவரை பார்பாராம்.

அதனாலேயே எப்பொழுதெல்லாம் லீவு கிடைக்கிறதோ அப்போதெல்லாம் சித்தி வீட்டுக்கு சென்று குஷ்புவை பார்ப்பாராம். சித்தி வீட்டில் பால்கனியில்  குஷ்பு வரும்போது  ஓரமாக நின்று பார்ப்பதை வழக்கமாக வைத்துள்ளார் கூடவே அவரது தாத்தாவும் பார்ப்பாராம்.