தமிழ் சினிமாவில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தும் நடிகர்கள் பலரும் இருக்கின்ற இடம் தெரியாமல் சைலண்டாக இருந்துகொண்டு அடுத்தடுத்த பட வாய்ப்பை கைப்பற்றி அசுர வளர்ச்சியை எடுக்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து மக்கள் மற்றும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறார்.
ஆனால் சினிமா உலகைப் பொறுத்தவரை ரசிகர்களையும் தாண்டி பொது மக்களையும் கவர்ந்து விடுத்தால் மட்டுமே வசூல் வேட்டை காணமுடியும் சினிமாவில் நீண்ட தூரம் பயணிக்க முடியும் என்பதை சரியாக புரிந்துகொண்ட சிவகார்த்திகேயன் காமெடி காதல் சென்டிமென்ட் என அனைத்தும் இருக்கும்படியான கதைகளை தேர்ந்தெடுத்து நடித்தார்.
திரைப்படங்கள் இவருக்குப் பெயரையும் புகழையும் பெற்றுத் தந்ததால் வெகு விரைவிலேயே முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தை பெற்றதோடு மட்டுமல்லாமல் இவரது படங்கள் நல்ல வசூல் வேட்டையும் நடத்தின. சமீபத்தில் கூட இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி தற்பொழுது மற்ற மொழிகளிலும் டாக்டர் திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு எங்கேயும் சிறப்பாக ஓடிக்கொண்டிருக்கிறது.
டாக்டர் படம் வெற்றியை நோக்கி இன்னும் ஓடிக்கொண்டிருக்கிறது. வெள்ளித் திரைக்கு வருவதற்கு முன்பாக சின்னத்திரையில் தொகுப்பாளராகவும், காமெடியனாகவும் பயணித்து வந்தவர் என்பது குறிப்பிட தக்கது அப்பொழுது வெறும் 2000 ரூபாய் மாத சம்பளமாக வாங்கிக் கொண்டிருந்த சிவகார்த்திகேயன் தற்போது அதிக சம்பளம் வாங்கும் நடிகர்களில் ஒருவராக மாறி உள்ளார்.
தற்போது இவர் நடிப்பில் டாக்டர் திரைப்படத்தில் மிகப் பெரிய வெற்றியடைந்ததை தொடர்ந்து இன்னுமும் தனது சம்பளத்தை பல மடங்கு உயர்த்தி உள்ளதாக தகவல் ஒன்று சமூக வலைதளப் பக்கத்தில் தீயை கசிந்துள்ளது அந்த வகையில் நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது ஒரு படத்திற்காக 30 கோடி வாங்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் இச்செய்தி ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல பரவி வருகிறது