நடிகர் சிவகார்த்திகேயனன் தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து தனது வளர்ச்சியை மிகப்பெரிய அளவில் உயர்த்திக் கொண்டு வலம் வருகிறார் அதற்கு ஏற்றார் போல சம்பளத்தையும் பலகோடி உயர்த்தி உள்ளார். இதனால் தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு நபராக இருந்து வருகிறார்.
கடைசியாக கூட இளம் இயக்குனர் நெல்சன் திலீப் குமாருடன் கைகோர்த்து டாக்டர் திரைப்படத்தில் நடித்தார். படம் வெளிவந்து விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அதுவும் குறிப்பாக வசூலிலும் 100 கோடிக்கு மேல் அள்ளி புதிய சாதனை படைத்தது. இந்த திரைப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் கையில் டான், அயாலன் மற்றும் பல்வேறு படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
அதில் முதலாவதாக டான் திரைப்படம் வெகுவிரைவிலேயே வெளிவர ரெடியாக இருக்கிறது இப்படி இருக்கின்ற நிலையில் சிவகார்த்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்கள் பிரபலங்களும் வாழ்த்துக்களை சமூக வலைதளப் பக்கத்தில் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தமிழ் சினிமாவில் காமெடியனாகவும், நடிகராகவும் வலம் வரும் நடிகர் சூரி சிவகார்த்திகேயன் இணைந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து அசத்தியுள்ளார் தற்போது சிவகார்த்திகேயன் பிறந்தநாளை முன்னிட்டு அவருக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக அவரை அழைத்து ஒரு தனி ரூமில் வைத்து கேக் வெட்டி கொண்டாடி அசத்தியுள்ளார்.
சிவகார்த்திகேயன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் இருவரும் மாறிமாறி புகைப்படங்கள் எடுத்துக்கொண்டனர் அதனை நடிகர் சூரி தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டு அசத்தி உள்ளார். ஒரு சில பதிவுகளையும் அதில் போட்டுள்ளார் அதில் அவர் என் அன்புத் தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் என கூறி உள்ளார். சூரி, சிவகார்த்திகேயன் செம்ம மாஸாக இருக்கும் அந்த புகைப்படம் இதோ.
என் அன்பு தம்பி செல்ல தம்பிக்கு இனிய பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்❤️❤️@Siva_Kartikeyan pic.twitter.com/vVEvktAAf5
— Actor Soori (@sooriofficial) February 17, 2022