என்னுடைய படத்திற்கு சுத்தமாக செட்டாகாத நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் – மேடையில் கெத்தாக பேசிய இயக்குனர்.

sivakarthikeyan
sivakarthikeyan

தமிழ் சினிமா உலகில் புதுமுக நடிகர் நடிகைகள் எப்படி வலம் வருகின்றனவோ அதுபோல புதுமுக இயக்குனர்களும் வலம் வந்து எடுத்தவுடனேயே டாப் நடிகர்களுக்கு கதை சொல்லியே சிறப்பான படங்களை கொடுத்து அசத்துகின்றனர். இது முன்னணி இயக்குனர்கள் பலருக்கும் தெரியாமல் போய் விடுகின்றனர்.

சிறப்பான கதைகளை வைத்து இருந்தாலும் சமீப காலமாக டாப் நடிகர்கள் அவர்களை அணுகுவதில்லை இதனால் பலர் பட வாய்ப்பை இழந்து இருக்கின்ற இடம் தெரியாமல் போய் விடுகின்றனர் சொல்லப்போனால் முன்னணி இயக்குனர்களுக்கான மரியாதையே தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

தமிழ் சினிமா உலகில் பல சிறப்பான படங்களை கொடுத்து அசத்தியவர் மூத்த இயக்குனர்களில் ஒருவர் பாலாஜி சக்திவேல்.இவர் இதுவரை சாமுராய், காதல், வழக்கு எண் 18/ 9 என பல படங்களை இயக்கி வெற்றி கண்டுள்ளார். ஒவ்வொரு படமும் எந்த ஒரு சாயலும் இல்லாமல் தனித்துவமாக இருந்ததால் இந்தத் திரைப்படங்கள் அனைத்தும் வெற்றிப் படங்களாக மாறியதன் காரணமாக பாலாஜி சக்திவேல்  ஒரு இயக்குனராக விஸ்வரூபம் எடுத்தார்.

இப்போது பெரிய அளவு படங்களை இயக்கவில்லை என்றாலும் இவர் பற்றிய பேச்சுக்கள் சமூக வலைதள பக்கங்களில் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த அளவுக்கு சிறப்பான படங்களை கொடுத்துள்ளார். அந்த படங்கள் இன்றும் பேசப்பட்டு வருகின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசும்போது அவர் சில விஷயங்களை புகழ்ந்துள்ளார்.

அதில் அவர் கூறியது நான் நிறைய புதுமுகங்களை அறிமுகப்படுத்தி உள்ளேன் என்பது பலருக்கும் தெரியும் அதற்காக எத்தனை பேரை நான் நிராகரித்து உள்ளேன் என்பது அவர்களுக்கு மட்டுமே தெரிந்த ஒன்று. நான் அப்படி ஒரு சில நிராகரித்த சிலரோ என்று உச்ச நட்சத்திரமாக இருக்கின்றனர் அப்படி நான் நிராகரித்த ஒருவர்தான் சிவகார்த்திகேயன் என கூறினார். அப்போது அவரும் பக்கத்தில் அமர்ந்து கொண்டு இதைக் கேட்டுக் கொண்டுதான் இருந்தார்.

balaji sakthivel
balaji sakthivel

சிவகார்த்திகேயன் முகம் ஒரு கமர்சியல் திரைப்படத்திற்கான முகமாக இருந்தது அதனால் நான் அவரை நிராகரித்து விட்டேன் என மேடையில் பகிரங்கமாக பேசினார் எனக்கு கதையின்படி யார் பொருத்தமாக இருப்பார்களோ அவர்களை தான் தேர்ந்தெடுப்பேன் அது புதுமுகமாக இருந்தாலும் சரி யாராக இருந்தாலும் சரி எனக்கு தேவைப்படுபவர்கள் எடுத்துக் கொள்வேன் அப்படி செய்தால் மட்டுமே அந்த கதாபாத்திரங்கள் சிறப்பாக அமையும்பேசினார் பாலாஜி சக்திவேல்.