தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக கொடிகட்டிப் பறந்து வருபவர் நடிகர் விஜய். இவர் தனது சிறந்த நடிப்பின் மூலம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.
இவரை தொடர்ந்து தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த காமெடி நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமாகி வெள்ளித்திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இந்நிலையில் நடிகர் விஜய் ஒரு பேட்டியில் சிவகார்த்திகேயன் மகளை பற்றி கூறியிருந்தார்.
அதில் சிவகார்த்திகேயனின் மகள் ஆதாரனா சட்டை ஒன்றை நடிகர் விஜய்க்கு பரிசளித்துள்ளார்.
அந்த சட்டையை போட்டுக் கொண்டு தான் நடிகர் விஜய் 2019ஆம் ஆண்டு நடந்த நடிகர் சங்கத் தேர்தலுக்கு வந்துள்ளார்.
இந்நிலையில் தேர்தலின் போது எடுத்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த புகைப்படம்.