சிவகங்கை மாவட்டத்திற்கு 21லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்சை வாங்கி தந்த நடிகர் சிவகார்த்திகேயன்.!

sivakarthikeyan
sivakarthikeyan

தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் மிகவும் பிஸியாக இருந்து வருபவர்தான் நடிகர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது சின்னத்திரையின் மூலம் அறிமுகமாகி தற்போது துறையிலும் கொடிகட்டி பறந்து வரும் இவர் ஏராளமான சின்னத்திரை நடிகர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறார்.

இவ்வாறு இவர் நடிப்பில் வெளிவரும் அனைத்து திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு இருந்து வரும் நிலையில் டாக்டர் திரைப்படத்தை தொடர்ந்து சமீபத்தில் டான் திரைப்படம் வெளிவந்தது இத்திரைப்படமும் நல்ல விமர்சனத்தை பெற்று வரும் நிலையில் தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

இப்படிப்பட்ட நிலையில் தற்போது சிவகார்த்திகேயன் ரசிகர்களை மெய்சிலிர்க்க வைக்கும் அளவிற்கு ஒரு விஷயத்தை செய்துள்ளார். அதாவது சிவகார்த்திகேயன் பொதுவாக தனது ஒவ்வொரு திரைப்படமும் வெளிவரும் பொழுது ஏதாவது மக்களுக்கு உதவி செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

அதாவது தனது அப்பா பெயரில் நடைபெற்றுவரும் தாஸ் அறக்கட்டளை மூலமாக  அவரின் திரைப்படங்கள்   வெளிவரும் பொழுதும் ஏதாவது மக்களுக்கு தேவையான ஒரு உதவியை செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்பொழுது டான் திரைப்படம்   வெளிவந்ததால் சிவகங்கை மாவட்ட சேர்ந்த மக்களுக்கு இருபத்தி ஒரு லட்சம் மதிப்புள்ள ஆம்புலன்ஸ் ஒன்றை வழங்கியுள்ளார்.

இந்த ஆம்புலன்சை இரு தினங்களுக்கு முன்பு மாவட்ட அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளார் எனவே அதிகாரிகள் அனைவரும் இணைந்து சிவகார்த்திகேயனுக்கு நன்றி சொல்லும் வகையில் பெரிய அளவில் பாராட்டு விழா நடத்தினார்கலாம்.  மேலும் இந்த ஆம்புலன்ஸ்சில் அனைத்து வசதிகளும் உள்ள வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது எனவே ரசிகர்கள் பலரும் சிவகார்த்திகேயனுக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.