தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் பள்ளி விழா ஒன்றில் கலந்து கொண்டு அனைவரையும் மகிழ்ச்சிப்படுத்திவிட்டு பிறகு மாணவர்களிடம் மன்னிப்பு கேட்டது பெரிதும் நிகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதாவது தொலைக்காட்சியின் மூலம் தன்னுடைய திரைப்பயணத்தை தொடர்ந்து தற்பொழுது தென்னிந்திய சினிமாவில் தவிர்க்க முடியாத நாயகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன்.
தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வரும் இவர் கொஞ்சம் இடைவெளி கிடைத்தாலும் கூட டிவி நிகழ்ச்சிகள், குடும்பம், ரசிகர்கள் என அனைத்திலும் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் மைதிரி எனும் நட்பு திருவிழா செட்டிநாடு வித்யாஸ்ரம் என்று பள்ளியில் நடந்தது. அதில் சிறப்பு விருந்தினராக நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் நடிகை யாஷிகா ஆனந்த் ஆகியோர்கள் கலந்து கொண்டார்கள்.
இருவரையும் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்துடன் வரவழைத்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் சிவகார்த்திகேயன் இந்நிகழ்ச்சிக்கு சற்று தாமதமாக வந்ததன் காரணமாக குறித்த நேரத்தில் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை எனவே மாணவர்கள் அனைவரிடமும் தாமதமாக வந்ததற்காக முதலில் மன்னிப்பு கேட்டார் மேலும் டிராபிக் சாம் அதிகமாக இருந்ததன் காரணமாகத்தான் என்னால் வர முடியவில்லை என்றும் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து பேசிய அவர் காலை முதல் படப்பிடிப்பில் கலந்து கொண்டு மிகவும் சோர்வாக வந்தேன் உங்களைப் பார்த்த பின்னர் புது எனர்ஜி வந்து விட்டது என தெரிவித்துள்ளார். மேலும் ரசிகர்களிடம் தொடர்ந்து பேசிய இவர் பிறகு மேடையில் இருந்தபடி தன்னுடைய மொபைலில் செல்பி எடுத்து அசத்தினார்.\
ரசிகர்களும் யாஷிகா மற்றும் சிவகார்த்திகேயனை பார்த்தவுடன் உற்சாகத்தில் இருந்து வந்தார்கள் இப்படிப்பட்ட நிலையில் தற்போது இது குறித்த புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது மேலும் தொடர்ந்து ரசிகர்கள் சிவகார்த்திகேயனை பாராட்டி வருகிறார்கள்.