மேடையில் ஆத்திரமடைந்த நடிகர் சிவகர்திகேயன்..! இணையத்தில் வைரலாகும் வீடியோ இதோ..!

sivakarthi

தமிழ் சினிமாவில் மிக குறுகிய காலத்தில் முன்னணி நடிகர் என்ற அந்தஸ்தைப் பெற்றவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன் பொதுவாக சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படங்கள் இளைஞர்கள் பெண்கள் என அனைவரும் குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு இருக்கும் வகையில் தாய்மார்களை கவர்ந்து விட்டார் என்றே சொல்லலாம்.

அது மட்டுமில்லாமல் நடிகர் சிவகார்த்திகேயன் சிறந்த நடிகர் மட்டுமில்லாமல் பாடகர் மிமிக்ரி ஆர்டிஸ்ட் மற்றும் தொகுப்பாளர் என பல்வேறு திறன் கொண்டவர் அந்த வகையில் இவர் சமீபத்தில் இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் டாக்டர் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்று ரசிகர்களின் பேராதரவை உருவாக்கியது.

மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன் அயலான் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இவ்வாறு உருவாகும் இந்த திரைப்படத்தை இயக்குனர் ரவி இயக்குவது மட்டுமில்லாமல் இந்த திரைப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடித்துள்ளார் மேலும் இந்த திரைப்படத்திற்கு ஏ ஆர் ரகுமான் அவர்கள் தான் இசையமைத்த வருகிறாராம்.

அதுமட்டுமில்லாமல் இந்த திரைப்படம் ஏலியன் சம்பந்தப்பட்ட திரைப்படமாக அதன் காரணமாக ஹாலிவுட் திரைப்படத்தை இந்த திரைப்படம் முறியடிக்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த திரைப்படத்தின் தொடர்ச்சியாக நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் கமலஹாசன் தயாரிக்கும் ஒரு திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக அதிகாரபூர்வமான அறிவிப்பு சமீபத்தில் இணையத்தில் வெளியாகி உள்ளது.

sivakarthikeyan
sivakarthikeyan

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவான திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர் மத்தியில் மிகுந்துள்ளது அந்த வகையில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ஒரு பாடல் ரசிகர்களை கவர்ந்தது மட்டுமில்லாமல் அவை தற்போது வைரலாக பரவி வருகிறது இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரித்து வருவது மட்டுமில்லாமல் இயக்குனராக சிபி சக்கரவர்த்தி இயக்கியுள்ளார்.

மேலும் இந்த திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அருள்மோகன் சிவாங்கி எஸ் ஜே சூர்யா போன்றோர் நடித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த திரைப்படம் மே மாதம் 13ஆம் தேதி திரையரங்கில் வெளியாகி உள்ளதாகவும் பட குழுவினர்கள் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளார்கள்.

இந்நிலையில் புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட சிவகார்த்திகேயன் அவர்கள் பாலா தொடர்ந்து பேசி கொண்டிருப்பதன் காரணமாக கடுப்பாகி அவரைக் கூப்பிட்டு வாயில் கைவைத்து அமைதியாக இரு என்று கூறியுள்ளார் இவ்வாறு அந்த வீடியோ சமூக வலைதளப் பக்கத்தில் தற்போது வைரலாக பரவி வருகிறது.