தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருப்பவர் சிம்பு. இந்நிலையில் சட்டமன்ற தேர்தலுக்காக நேற்று காலை 7 மணியிலிருந்து இரவு 7 மணி வரையும் வாக்குகள் செலுத்துவது நடைபெற்று வந்தது.
எனவே பல அரசியல் பிரபலங்கள் மற்றும் சினிமா நட்சத்திரங்கள் என்று அனைவரும் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்தார்கள். அந்தவகையில் நேற்று தளபதி விஜய் சைக்கிளில் வந்து தனது வாக்கை செலுத்தினார்.
இவரை தொடர்ந்து விக்ரம் நடந்து வந்து தனது வாக்கை செலுத்தினார் மற்றும் அஜித் மாஸ் போடாமல் வந்து தன்னுடன் செல்பி எடுத்துக் கொண்ட ரசிகரிடம் கடுமையாக நடந்து கொண்டார். இந்த தகவல்கள் அனைத்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தது.
இந்நிலையில் கமல்ஹாசன், ரஜினி உட்பட இன்னும் பல திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்துடன் வந்து நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை செலுத்திய புகைப்படங்கள் இணையதளத்தில் வைரலாக வந்தது.
இவர்களைத் தொடர்ந்து நடிகர் சிம்பு தனது வாக்கை பதிவு செய்வதற்காக சென்னையில் உள்ள தி நகரில் ஹிந்தி பிரச்சார சபாவில் தனது வாக்கை பதிவு செய்தார். இதனை அறிந்த ரசிகர்கள் உடனே சிம்புவை சுற்றிவளைத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
சிம்புவுடன் செல்பி மற்றும் கை கொடுப்பதற்காக அனைத்து ரசிகர்களும் ஒன்று சேர்ந்தால் சற்று பரபரப்பு ஏற்பட்டது. சிம்பு செம ஸ்டைலாக கூலிங் கிளாஸ் போட்டுக்கொண்டு இருந்தார். பிறகு போலீசார் சிம்புவை பத்திரமாக காருக்கு அழைத்துச் சென்றார்கள்.