என்ன சிம்பு நைட்டு முழுக்க ஒரே ஜாலியா.. சிரித்துக் கொண்டே உண்மையை கேட்ட பிரபல இயக்குனர்.? சின்ன தல ரியாக்சன் என்ன தெரியுமா..

hari
hari

தமிழ் சினிமா உலகில் இன்று உச்ச நட்சத்திரமாக ஓடிக்கொண்டு இருப்பவர் சிம்பு இவர் குழந்தையாக இருக்கும்பொழுது சினிமாவில் நடிக்க தொடங்கிவிட்டார் பின் ஒரு குறிப்பிட்ட வயது எட்டிய பிறகு சினிமாவில் ஹீரோவாக நடிக்க ஆரம்பித்தார் அதோடு மட்டும் நிறுத்திக் கொள்ளாமல் டான்சராகவும், பாடகராகவும், இசையமைப்பாளராகவும், இயக்குனராகவும் தனது திறமையை வெளிக்காட்டி வெற்றியை ருசித்தார்.

இப்பொழுது கூட நல்ல படங்களில் நடித்து வருகிறார் கடைசியாக இவர் நடித்த மாநாடு, பத்து தல போன்ற படங்கள் பெரிய வெற்றியை ருசித்த நிலையில் அடுத்ததாக தேசிங்கு பெரியசாமி  இயக்கத்தில் கமல் தயாரிக்கும் தனது 48வது படத்தில் சிம்பு நடிக்க இருக்கிறார். சிறந்த நடிகர் என பெயர் எடுத்திருக்கும் சிம்பு ஆரம்பத்தில் சரியாக படங்களில் நடிக்க வருவதில்லை மேலும் பிரபல நடிகை காதலித்ததால் அப்பொழுது பல பிரச்சனைகளையும் சந்தித்தார்.

அப்படித்தான் ஹரி இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவான திரைப்படம் கோவில் இந்த படத்தில் பல பிரச்சனைகள் நடந்துள்ளது. அது குறித்து விலாவாரியாகவும் பார்ப்போம்.. ஹரிக்கும், சிம்புவுக்கும் கோவில் ஒரு மிகப்பெரிய வெற்றி திரைப்படம் ஆனால் இந்த படம் உருவாக்க ஹரி ரொம்பவும் கஷ்டப்பட்டு உள்ளார்.  சரியான நேரத்திற்கு நடிகர் சிம்பு சூட்டிங்கிற்கு வரமாட்டாராம்.. ஒரு சமயத்தில் கோபமடைந்த ஹரி  சிம்பு முன்பு உதவி இயக்குனரை அழைத்து ஒன்னு 9 மணிக்கு வர சொன்னா 11:15க்கு வர என்ன நெனச்சுக்கிட்டு இருக்க தொலைச்சிடுவேன்..

சம்பளம் வாங்குற இல்ல ஒழுங்கா வேலைய பாரு என கூறி இருக்கிறார். ஹரி இதை தனக்குத்தான் சொல்கிறார் என்பதை சிம்புவும் உணர்ந்து கொண்டார் அதன் பிறகு அடுத்தடுத்த நாட்களில் சரியான நேரத்திற்கு சூட்டிங் இருக்கு வந்து படம் நடித்து கொண்டிருந்தாராம் ஒருநாள் நடிகை சோனியா அகர்வாலுடன் இரவு பார்ட்டி ஒன்று வைத்து குடியும் கும்மாளமாக ஜாலியாக இருந்துள்ளார்.

இந்த விஷயமும் ஹரிக்கு காதுக்கு சென்றுள்ளது. மறுநாள் சிம்புவை அழைத்து என்ன ஒரே ஜாலிதான் எனக் கூற அப்படி எல்லாம் ஒன்னும் இல்லை என சிம்பு கூறி இருக்கிறார்  எல்லாம் எனக்கு தெரியும் எனக்கூறி ஹரி சிரித்துக்கொண்டே சென்றாராம். ஹரியை பொறுத்தவரை நீ எப்படி வேணா இரு சூட்டிங் நேரத்திற்கு கரெக்ட்டாக வரவேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாராம் இதனை பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.