புத்தாண்டை முன்னிட்டு நடிகர் சிம்பு வெளியிட்ட அறிக்கை..! என்ன சொல்லியிருக்காரு தெரியுமா..?

simbu-02

பல வருடம் கழித்து சிம்பு நடிப்பில் வெளியான முதல் திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து நடிகர் சிம்பு இந்த புத்தாண்டில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில் சிம்பு கூறியது என்னவென்றால் என் பாசத்திற்குரிய அனைவருக்கும் வணக்கம் நம்மில் பலர் நெருங்கிய சொந்தங்களை இழந்திருப்போம் பலர் வாழ்க்கையின் எல்லையை  தொட்டு மீண்டு இருப்பார் அந்த வகையில் கடந்த வருடம் பல்வேறு கடமைகளையும் கடந்து வந்திருக்கிறோம்.

இந்நிலையில் இறைவனின் அருள் உடன் இந்த புதிய ஆண்டை காண காத்திருக்கிறோம்.  மேலும் தனிப்பட்ட முறையில் மாநாடு திரைப்படத்தை மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக கொண்டாட வைத்த இந்த ஆண்டிற்கு என்னுடைய மிக  மனமார்ந்த நன்றி என கூறியுள்ளார்.

அதேபோல இந்த 2002ஆம் ஆண்டு மிகவும் சந்தோஷத்துடன் வரவேற்கிறேன் எப்பொழுதும் உங்களை போலவே என்னை பார்த்துக் கொள்ளுங்கள் என்று கூறியது மட்டுமில்லாமல் ரசிகர்கள் திரையுலக சொந்தங்கள் பத்திரிகையாளர்கள் என பலருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.

இவ்வாறு அவர் கூறியதும் மட்டுமில்லாமல் கடைசியாக நீங்கள் இல்லாமல் நான் இல்லை என்று அன்புடன் டிஆர் சிலம்பரசன் என குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு அவர் வெளியிட்ட அறிக்கை சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.

simbu-01
simbu-01