நடிகர் சிம்புவின் முழு சொத்து மதிப்பு – இத்தனை கோடியா.? மிரளும் ரசிகர்கள்.!

simbu-
simbu-

நடிகர் சிம்பு குழந்தை நட்சத்திரமாக சினிமா உலகில் அறிமுகமாகி பின் ஒரு கட்டத்தில் ஹீரோவாக தொடர்ந்து வெற்றி படங்களை கொடுத்து தனக்கென ஒரு நிரந்தர இடத்தை பிடித்தார். சினிமாவில் நடிப்பதையும் தாண்டி இவர்  பாடகராகவும் இயக்குனராகவும் தொடர்ந்து ஓடிக் கொண்டிருக்கிறார்.

இதனால்  நடிகர் சிம்புவின் சினிமா பயணம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே இருக்கிறது. ஆனால் ஒரு சமயத்தில் சிம்புவின் படங்கள் தோல்வியை தழுவியது. இதனால் சிம்புவை வைத்து படம் பண்ண எந்த ஒரு இயக்குனரும், தயாரிப்பாளரும் முன் வரவில்லை. இதனால் நடிகர் சிம்பு வீட்டிலேயே முடங்கினார். மேலும் உடல் எடையும் அதிகரித்து வயதான தாத்தா போல கிடந்தார்.

ஆனால் ஒரு கட்டத்தில் சினிமா தான் தனக்கு தொழில் என்பதை உணர்ந்து அதிரடியாக தனது உடல் எடையை எல்லாம் குறைத்து மீண்டும் நடிக்க தொடங்கினார். அந்த வகையில் சிம்பு ஈஸ்வரன், மாநாடு என அடுத்தடுத்த படங்களில் நடித்தார். மாநாடு திரைப்படம் தான் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்ததோடு மட்டுமில்லாமல் 100 கோடி வசூல் அள்ளி சாதனை படைத்த நிலையில் அடுத்தடுத்த திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார்.

அதில் முதலாவதாக கௌதம் மேனனுடன் மூன்றாவது முறையாக கூட்டணி அமைத்து வெந்து தணிந்தது காடு படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் வெகு விரைவிலேயே வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து பத்து தல மற்றும் பெயிரிடப்படாத  ஒரு சில படங்களில் கமிட் ஆகியுள்ளார். இப்படி சினிமாவில் தொடர்ந்து நடிப்பதால் சிம்பு விட்ட இடத்தை பிடிக்க ரெடியாக இருக்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது.

simbu-
simbu-

இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு எவ்வளவு என்பது குறித்து தகவல் கிடைத்துள்ளது. அதன்படி பார்க்கையில் சிம்பு குவித்து வைத்திருக்கும் சொத்து மதிப்பு சுமார் 150 கோடி இருக்கும் என சொல்லப்படுகிறது இது அதிகாரப்பூர்வமான தகவல் இல்லை என்றாலும் சினிமா வட்டாரங்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டு வருகிறது.