நடிகர் சிம்பு நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் பத்து தல படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற இரண்டு திரைப்படங்களும் பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்த நிலையில் தற்போது இழந்த மார்க்கெட்டை மீண்டும் சிம்பு பெற்றுள்ளார்.
சினிமாவை விட்டு மொத்தமாக விலகி விடுவார் என பலரும் கூறி வந்த நிலையில் தற்பொழுது மீண்டும் களம் இறங்கி சிம்பு தொடர்ந்து ஹிட் திரைப்படங்களை தந்து வருகிறார். இந்நிலையில் தற்பொழுது இவர் ஜில்லுனு ஒரு காதல் பட இயக்குனர் ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி வரும் பத்து தல படத்தில் நடித்து முடித்துள்ளார்.
இந்த படத்திற்கு இசை புயல் ஏ ஆர் ரகுமான் இசையமைத்திருக்கும் நிலையில் பத்து தல படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. அந்த விழாவில் அப்படத்தின் ட்ரெய்லரையும் வெளியிட்டு ரசிகர்களை பட குழுவினர்கள் உற்சாகப்படுத்தினர்.
மாசான வசனங்களுடன், ஆக்சன் காட்சி நிறைந்த படமாக இருக்கும் ட்ரைலரை பார்த்து பத்து தல படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் காத்து வருகின்றனர். மேலும் இந்த படம் வருகின்ற மார்ச் 30ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் இந்த படத்தினை ஞானவேல் ராஜா தயாரித்துள்ள நிலையில் சிம்புவுடன் இணைந்து கௌதம் கார்த்திக், கௌதம் மேனன், பிரியா பவானி சங்கர், டிஜே அருணாச்சலம் ஆகியோர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.