முத்த காட்சிக்கு பயந்து நடுங்கிய சிம்பு – “வெந்து தணிந்தது காடு” படத்தில் நடந்த சுவாரஸ்யம்.

simbu
simbu

தமிழ் சினிமா உலகில் முன்னணி நடிகராக வலம் வருவர் சிம்பு. ஆரம்பத்தில் நல்ல நல்ல படங்களை தேர்வு செய்து தொடர்ந்து ஹிட் படங்களை கொடுத்து ஓடினார் இதனால் அஜித், விஜய்க்கு பிறகு இவரது பெயர் தான் இருக்கும் என அப்பொழுதே பேசப்பட்டது ஆனால் ஒரு கட்டத்தில் இவர் நடித்த இரண்டு மூன்று படங்கள் தொடர் தோல்வி படங்களாக அமைந்தன.

மேலும் சில சர்ச்சைகளிலும் சிக்கினார் இதனால் சிறிது காலம் சினிமா உலகில் தென்படவில்லை மேலும் வந்த பட வாய்ப்புகளையும் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் சிம்பு சில ஆண்டுகள் இருந்தார் இதனால் இவருக்கு பின்னால் இருந்தவர்கள் எல்லாம் தமிழ் சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்தனர். இதை ஒரு கட்டத்தில் உணர்ந்து கொண்ட..

சிம்பு திடீரென தனது உடல் எடையை குறைத்து புதிய அவதாரம் எடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதனைத் தொடர்ந்து சிம்பு இயக்குனர் கௌதம் மேனன் உடன் இணைந்து வெந்து தணிந்தது காடு என்னும் படத்தில் நடித்திருந்தார்.

வெந்து தணிந்தது காடு படத்தை ஐசரி கணேஷ் தயாரித்திருந்தார் மற்றும் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் கடந்த செப்டம்பர் 15ஆம் தேதி திரையரங்கில் வெளியானது, இந்த படமும் மக்கள் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று  எதிர்பாராத அளவு வசூலும் அள்ளி வருகின்றன.

இந்த நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலில் முத்த காட்சி இடம் பெறுவது போல கௌதம் மேனன் அமைத்திருந்தாராம் ஆனால் அந்த காட்சி வேண்டாம் என சிம்பு தவிர்த்து விட்டாராம். அதன் பிறகு அந்த காட்சியை கட் செய்து கௌதம் எடுத்துள்ளாராம் இந்த தகவலை சமீபத்திய பேட்டி ஒன்றில் கௌதம் மேனன் கூறியுள்ளார்.