சிம்பு சினிமாவுலகில் பல வெற்றி தோல்விகளை தந்துள்ளார் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று தான் ஆனால் அதை உணர்ந்து கொண்ட நடிகர் சிம்பு தனது எண்ணங்களையும் உடல் எடையையும் குறைத்து சமீபத்தில் புதிய அவதாரம் எடுத்தார்.
அதன்பின் இவர் நடிப்பில் வெளியான ஈஸ்வரன் மாபெரும் ஹிட்டடித்தது தொடர்ந்து அவரது நடிப்பில் தற்போது பல்வேறு திரைப்படங்கள் உருவாகி வருகின்றன. மாநாடு, பத்து தல, வெந்து தணிந்தது காடு போன்ற பல்வேறு திரைப்படங்கள் அடுத்தடுத்து வரிசை கட்டி நிற்கின்றன.
அதில் முதலாவதாக மாநாடு திரைப்படம் வெளியாக இருக்கிறது ஆம் இந்த திரைப்படம் இந்த மாதம் 25ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இப்படி இருக்கின்ற நிலையில் அண்மையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் சிம்பு கலந்துகொண்டார்.
அப்பொழுது மாநாடு படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு திடீரென மேடையில் கண்கலங்கினார் நடிகர் சிம்பு இதனை பார்த்த ரசிகர்கள் ரொம்பவும் வருந்தினார். நடிகர் சிம்பு மேலும் பேசியது நான் நிறைய பிரச்சனைகளை சந்தித்து உள்ளேன் அதை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.
ஆனால் என்னை மட்டும் நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள் என ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார். சிம்பு அடுத்தடுத்து சிறப்பான படங்களை கொடுத்து ரசிகர்களை மகிழ்விக்கும் காத்துக்கொண்டிருக்கிறார். இந்த நிலையில் நடிகர் சிம்பு கண்கலங்கியது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது.