நடிகர் சிம்பு சினிமா ஆரம்பத்தில் எப்படி தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்து தன்னை வெளி உலகத்திற்கு காட்டி தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி கொண்டாரோ அதே வேகத்தில் சென்று இருந்தால் இப்போது அஜித், விஜய் ஆகியவர்களுக்கு பிறகு அடுத்த இடத்தை இவர் பிடித்திருப்பார்.
நான் நினைத்த மாதிரியே சிம்புவுக்கு போகவில்லை எது எப்படியோ தான் செய்த தவறை திருத்திக் கொண்டு தற்போது சினிமாவுலகில் மீண்டும் தனது திறமையை காட்ட உடல் எடையை குறைத்து தொடர்ந்து சிறப்பான படங்களில் நடித்து வருகிறார் அந்த வகையில் மாநாடு படம் வேற லெவல் வெற்றி. அதனை தொடர்ந்து நடிகர் சிம்பு பல்வேறு திரைப்படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார்.
முதலாவதாக கௌதம் மேனனுடன் கைகோர்த்து வெந்து தணிந்தது காடு திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதனைத் பின் பத்து தல, கொரோனா குமார் மற்றும் பல்வேறு படங்கள் இருக்கின்றன. இப்படி இருக்கின்ற நிலையில் சிம்பு ஓ மை கடவுளே படத்தின் இயக்குனர் அஸ்வந்த் மாரிமுத்து அவர்களிடம் ஒரு கதையைக் கேட்டு வந்தார்.
தயாரிப்பாளரிடமும் ஓகே வாங்கினார் அதன் பிறகு இயக்குனர் கதையை டெவலப் செய்து வீட்டில் முழு கதையையும் ரெடி செய்து சிம்புவிடம் தொடர்பு கொண்டு செல்ல ரெடியாக இருந்தார் ஆனால் சிம்புவை இதுவரையிலும் இயக்குனரும், தயாரிப்பாளரும் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாம்.
இதனை பார்க்கும் பொழுது மீண்டும் தனது வேலையைக் காட்ட ஆரம்பித்து விட்டார் என பலரும் கூறி வருகின்றனர். ஆனால் உண்மையில் நடிகர் சிம்பு தற்போது துபாய்க்கு விடுமுறைக்காக சென்று உள்ளாராம் வந்த பிறகு கதை கேட்பார் என கூறப்படுகிறது.