தளபதி விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை மிஸ் செய்த நடிகர் சிம்பு.? எந்த படத்தில் தெரியுமா.?

simbu-and-vijay
simbu-and-vijay

சினிமாவுலகில் உச்ச நட்சத்திரங்களாக இருக்கும் நடிகர்கள் படங்களில் வளர்ந்து வரும் நடிகர் நடிகைகள் தொடங்கி புதுமுக நடிகர் நடிகைகள் பலரும் நடிக்க காத்து கொண்டிருக்கின்றனர் அந்த வாய்ப்பு எப்போதாவது ஒருதடவை கிடைக்கும் ஆனால் அதை வேறு வழியில்லாமல் மிஸ் செய்தும் விடுகின்றனர்.

அந்த வகையில் தமிழ் சினிமாவில் விசித்திரமான விஜய்யுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு. தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு ரசிகர் பட்டாளத்தை வைத்து ஓடிக்கொண்டிருக்கும் சிம்பு கடைசியாக கூட மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து இருந்தார் அந்த திரைப்படம் பிரமாண்ட வெற்றியை பெற்றது.

அதை தொடர்ந்து அடுத்தடுத்த படமான வெந்து தணிந்தது காடு, பத்து தல , கொரோனா குமார் போன்ற பல்வேறு படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறார் இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு விஜயின் முக்கிய படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்டு உள்ளார் என்பது குறித்து செய்தி ஒன்று வெளியாகியுள்ளது அதன்படி பார்க்கையில் ஷங்கர் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் நண்பன்.

இந்த படத்தில் ஜீவா, ஸ்ரீகாந்த் இருவரும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் ஜீவா நடித்த சேவற்கொடி செந்தில் கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்க நடிகர் சிம்புதான் அந்த வாய்ப்பு கிடைத்தது ஆனால் அப்போது சில காரணங்களால் சிம்பு இந்த படத்தில் நடிக்க முடியாமல் போகவே பின் ஜீவாவுக்கு கை மாறியதாக கூறப்படுகிறது இதனால் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை அவர் மிஸ் செய்துவிட்டார்.

நடிகர் சிம்புவுக்கு விஜய், அஜித்தை ரொம்ப பிடிக்கும் அவர்கள் படங்களில் நடித்து விட வேண்டும் என ரொம்ப காலமாக காத்துக் கிடந்த நிலையில் இப்படி ஒரு வாய்ப்பை அவர் மிஸ் செய்தது அவரையும் அவரது ரசிகர்களையும் சற்று வருத்தமடைய செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.