சிம்புவும் கௌதம் மேனனும் இணையும் படம் எப்பொழுதுமே வெற்றி படம்தான் அந்த வரிசையில் வெந்து தணிந்தது காடு படம் வெற்றி படம் என்பது படத்தின் சூட்டிங் அப்பவே ரசிகர்கள் கணித்து விட்டனர். வெந்து தணிந்தது காடு கதையை கௌதம் மேனன் சூப்பராக உருவாக்க நடிகர் சிம்பு அந்த கதைக்கு ஏற்றார் போல ரொம்பவும் மெனக்கெட்டு சூப்பராக நடித்துள்ளார்.
குறிப்பாக இந்த படத்தில் நடிகர் சிம்பு தனது உடல் எடையை ஏற்றியும் இறக்கியும் நடித்து ரொம்ப கஷ்டப்பட்டு உள்ளார். எழுத்தாளர் தொடங்கி சிம்புவின் அப்பாவும் வெந்து தணிந்தது காடு படத்திற்காக எனது மகன் ரொம்ப கஷ்டப்பட்டார் என கூறினார். அதற்கான பலனும் தற்பொழுது கிடைத்துள்ளது.
வெந்து தணிந்தது காடு திரைப்படம் இன்று கோலாகலமாக திரையரங்கில் வெளியானது காலை 5:00 மணிக்கு முதல் ஷோ வெளியிடப்பட்டது ஆரம்பத்தில் இருந்து இந்த படத்திற்கு பாசிட்டிவ்வான விமர்சனம் வருவதால் பட குழுவும் சரி சிம்புவும் தற்போது செம்ம சந்தோஷத்தில் இருக்கின்றனர்.
இந்த படம் மாஸ் படமாக இல்லை என்றாலும் ஒரு கிளாஸ் ஆக படம் சூப்பராக நகர்ந்து உள்ளது என படத்தைப் பார்த்த ரசிகர்கள் தொடங்கி சினிமா பிரபலங்கள் வரை தனது கருத்துக்களை வெளியிட்டு அசத்தி வருகின்றனர். இந்த படம் மாநாடு படத்தை தொடர்ந்து சிம்புவுக்கு ஒரு பிளாக்பஸ்டர் படம் என்பதில் எந்த ஒரு மாற்றுக் கருத்தும் இல்லை.
இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு சால்ட் அண்ட் பெப்பர் ஸ்டைலில் கோர்ட் சூட் போட்டுக்கொண்டு செம மாஸ் ஆக இருக்கும் புகைப்படங்கள் சில இணையதள பக்கத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன இதோ நீங்களே பாருங்கள் அந்த அழகிய புகைப்படத்தை..