சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி!! யார் கைப்பற்றுவது இந்த படத்தை?

simbu-and-siva
simbu-and-siva

Actor simbu vs sivakarthikeyan: சினிமா துறையில் முன்னணி நடிகர்களான சிம்பு மற்றும் சிவகார்த்திகேயனிடையே கடும் போட்டி நடைபெற்று வருகிறது. இதற்கு காரணம் தெலுங்கு படமான ஆள வைகுண்ட பரந்தாமாலு என்ற படம் ஆகும். இந்த படத்தை தமிழில் ரீமேக் செய்ய உள்ளதாக இருக்கிறார்கள். இதில் நான் தான் நடிப்பேன் என இருவரும் போட்டி போட்டு கொள்கின்றனர். இந்த படத்தில் ஹீரோவாக நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ஹீரோயினாக பூஜா ஹெக்டே நடித்திருந்தனர். இந்த படம் பல படங்களின் சாதனைகளை உடைத்ததாகவும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் கதை பழைய கதையை கொண்டது என்றாலும் அது சொல்ல பட்ட விதம் சிறப்பாக இருந்தது எனவும் கூறி வருகின்றனர்.இந்த படத்திலுள்ள புட்ட பொம்மா பாடல் மெகா ஹிட்டானது. இந்த பாடல் யூ டியூபில் 101 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்தது.

எனவே அல்லு அர்ஜுன் அவர்கள் இசையமைப்பாளர் தமன்னிடம் , ‘சொன்னதை செஞ்சிட்டீங்க…’ என்று பாராட்டியுள்ளார். சினிமாவில் அதிகம் வசூல் பெற்ற படம் லிஸ்டில் இந்த படம் 2வது இடத்தை பெற்றது எனவும் கூறாப்படுகிறது.யாருக்கு தான் இந்த படம் சிக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து வருகின்றனர்.