விஜய் பாடலுக்கு விஜய் போல் நடனமாடிய சிம்பு.! இணையத்தில் வைரலாகும் வீடியோ

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு.பல சர்ச்சைகள் மற்றும் பிரச்சனைகளுக்குப் பிறகு தற்போது தான் சினிமாவில் தொடர்ந்து நடித்து வருகிறார்.இந்நிலையில் சிம்பு நடிப்பில் இறுதியாக ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்து வசூல் ரீதியாக பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் விமர்சன ரீதியாக நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்பொழுது இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் கொரோனா கட்டுப்பாட்டுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சிம்பு வாரிசு நடிகராக அறிமுகமான காரணத்தினால் சினிமாவில் எளிதில் பிரபலமடைந்தார்.

அதுமட்டுமல்லாமல் இவர் தனது சிறிய வயதில் இருந்தே நடித்து வருவதால் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார்.இந்த நிலையில் தான் இவர் மீது பல காதல் சர்ச்சை ஏற்பட்டது அதோடு இவர் நல்ல கதையாக இருந்தாலும் அத்திரைப்படத்தை வேண்டாம் என்று கூறி விடுவாராம் எனவே  ஒரு கட்டத்தில் இதற்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது.

அதுமட்டுமல்லாமல் இவர் எந்த திரைப்படத்தில் படிக்க வேண்டுமானாலும்  அந்தத் திரைப்படத்திற்கு சொல்லுங்க நேரத்திற்கு சென்று நடிக்க மாட்டாராம் எனவே தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள் என்று அனைவரும் இவரை வைத்து படம் உருவாக மிகவும் பயந்தார்கள்.இதனால் இவருக்கு சினிமாவில் மார்க்கெட் குறைந்தது.

இந்நிலையில் தற்பொழுது அனைத்தும் தவறு என்பதை உணர்ந்து மிகவும் சரியாக குறித்த நேரத்திற்கு சென்று படப்பிடிப்புகளில் கலந்து கொள்வதை  வழக்கமாக கொண்டிருக்கிறாராம். இந்நிலையில் நடிகர் சிம்பு பல வருடங்களுக்கு முன்பு விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த ஜோடி நம்பர் ஒன் நிகழ்ச்சியில் நடுவராக பணியாற்றி வந்தார் என்பது நாம் அறிந்த ஒன்று தான்.

அவ்வப்போது தளபதி விஜயின் பாடலான அப்படி போடு போடு பாடலுக்கு நடனம் ஆடிவுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ.