பிரமாண்ட இயக்குனர் மகளுடன் டூயட் பாடப் போகும் நடிகர் சிம்பு..! அதுவும் எந்த திரைப்படத்தில் தெரியுமா..?

simbu-1

வெகு வருடங்களாக தோல்வி திரைப்படங்களை மட்டுமே கொடுத்து வந்த நடிகர் சிம்பு சமீபத்தில் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றதை தொடர்ந்து தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் தற்போது சிம்பு பார்ப்பதற்கு காதல் அழிவதில்லை திரைப்படத்தில் எப்படி அறிமுகமானார் அந்த அளவிற்கு தன்னுடைய இளமையை மறுபடியும் கொண்டு வந்தது மட்டுமில்லாமல் தற்போது பட வாய்ப்புகளையும் குவித்துக் கொண்டு வருகிறார்.

இந்நிலையில் நடிகர் சிம்பு கைவசம் 10 தல, வெந்து தணிந்தது காடு, கொரோனா குமார் ஆகிய திரைப்படங்களை வைத்துள்ளார் அந்தவகையில் இவர் நடிக்கும் கோரொனா குமார் என்ற திரைப்படத்தை இயக்குனர் கோகுல் தான் இயக்கி வருகிறார்.

இவ்வாறு பிரபலமான நமது இயக்குனர் இதற்கு முன்பாகவே விஜய் சேதுபதி வைத்த இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா மற்றும் ஜூங்கா அன்பிற்கு இனியவள் போன்ற பல்வேறு மெகாஹிட் திரைப்படங்களை இயக்கி பெருமை வாய்ந்தவர்.

இந்நிலையில் தற்போது இவர் சிம்புவை வைத்து இயக்கி இருக்கும் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக பிரபல பிரமாண்ட இயக்குனரின் மகள் அதிதி சங்கர் அவர்கள் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதிதி சங்கர் சமீபத்தில்தான் டாக்டர் படிப்பை முடித்துள்ளார் அதுமட்டுமில்லாமல் தற்போது கார்த்திக் நடிப்பில் விருமன் என்ற திரைப்படத்தில் நடித்துவருகிறார் இந்நிலையில் அவர் சிம்புவுடன் ஜோடி போட்டு நடித்து காரணமாக ரசிகர்கள் மிகுந்த சந்தோஷத்தில் உள்ளார்கள்.

aditi shankar
aditi shankar