தமிழ் சினிமாவில் தற்போது முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சிம்பு இவ்வாறு பிரபலமான நமது நடிகர் பல்வேறு கஷ்டங்களையும் அவஸ்தைகளையும் கண்டு தற்போது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து மாபெரும் வெற்றி கண்டுள்ளார்.
இவ்வாறு இந்த திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து பல இயக்குனர்களும் சிம்புவை வைத்து திரைப்படம் இயக்குவதற்கு முன்வந்தது கொண்டிருப்பது மட்டுமில்லாமல் தன்னை திரை உலகில் பிரபலமாக காட்டிய இயக்குனர்களுக்கு மட்டுமே சிம்பு வாய்ப்பு கொடுத்து வருகிறார்.
இதனை தொடர்ந்து சமீபத்தில் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்தில் நடிகர் சிம்பு நடித்து வருகிறார் மேலும் கொரோனா குமார் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இத்திரைப்படத்தை கோகுல் அவர்கள் தான் இயக்கி வருகிறார்.
இவ்வாறு சிம்பு மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கும் வகையில் தற்போது ரசிகர்களை மேலும் மகிழ்ச்சியாக்கும் வகையிலும் ஒரு செய்தி வெளியாகி உள்ளது அந்த வகையில் சிம்பு தற்போது தன்னுடைய 47வது திரைப்படங்கள் வரை நடித்து விட்டார் என்பது அனைவருக்குமே தெரிந்த விஷயம் தான்.அந்த வகையில் இந்த திரைப்படங்களை தொடர்ந்து தன்னுடைய ஐம்பதாவது திரைப் படத்தில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
மேலும் சிம்புவின் 50வது திரைப்படம் எந்த இயக்குனர் இயக்க போகிறார் என்ற கேள்வி பலரிடமும் இருந்த நிலையில் அந்த திரைப்படத்தை சிம்புவே இயக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. ஏற்கனவே சிம்பு நடிப்பில் வெளியான வல்லவன் திரைப்படம் மாபெரும் வெற்றி கண்டது அதனை தொடர்ந்து மன்மதன் திரைப்படம் திரை உலகில் சாதனை படைத்தது இதனை தொடர்ந்து சிம்புவின் 50வது திரைப்படம் கண்டிப்பாக மாபெரும் கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.