நடிகர் சிம்பு 30 கிலோ உடல் எடையை குறைக்க.. என்னென்ன கஷ்டப்பட்டார் தெரியுமா.? கண்கலங்கும் ரசிகர்கள்.

simbu
simbu

நடிகர் சிம்பு தமிழ் சினிமா உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக தன்னை மாற்றிக் கொண்டு தொடர்ந்து சூப்பர் ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார் மேலும் சிறப்பான படங்களில் நடித்து அஜித், விஜய் அவர்களுக்கு அடுத்த லிஸ்டில் இவர் இருப்பார் என பார்க்கப்பட்டது.

ஆனால் ஒரு இடத்தில் குடும்ப பிரச்சனை, காதல் தோல்வி மற்றும் உடம்பை அதிகமாக ஏற்றுக் கொண்டு போனதால் ஒரு ஹீரோ மாதிரியே தெரியாமலேயே சிம்பு இருந்தார். மேலும் படத்தின் ஷூட்டிங்கு சரியாக வருவதில்லை என அடுத்தடுத்த புகார்கள் அவர் மீது விழுந்தன. இதை உணர்ந்து கொண்ட  நடிகர் சிம்பு 100 கிலோவில் இருந்து அதிரடியாக 30 கிலோ குறைத்து தன்னை முற்றிலுமாக மாற்றினார்கள்.

மேலும் தனது எண்ணங்களை மாற்றியமைத்து படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை கொடுத்து வருகிறாராம் மாநாடு திரைப்படத்தின் கூட பார்த்திருக்க முடியும் வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் அடித்து நொறுக்கியது இந்த திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியது.

மாநாடு படத்தில் சிம்புவின் நடிப்பு போற்றப்படும் வகையில் இருந்தது பெரும்பாலும்  பஞ்ச் டயலாக், சீன் போடுவது போன்றவை இல்லாமல் படத்தின் கதைக்கு என்ன தேவையோ அதை சரியாக கொடுத்து அசத்தி இருந்தார். இப்படி இருக்கின்ற நிலையில் நடிகர் சிம்பு 30 கிலோ உடல் எடையை குறைக்க பல போராட்டங்களை சந்தித்து உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிரிக்கெட், பேட்மிட்டன், டென்னிஸ், பேஸ்கட் பால் போன்றவற்றை பல மணி நேரம் விளையாடினாரம் மேலும் ஜிம்மே கதியேனை எனக் கடந்து  வொர்க் அவுட் செய்து அசத்தி உள்ளார்.  மேலும் பரதநாட்டியம், யோகா, களரி, மசாஜ் போன்றவற்றை போன்றவற்றை செய்துள்ளார் இது தவிர ஆயுர்வேத உணவுகளையும் அவர் கொண்டுள்ளாராம்.

இதன் மூலமாகவே தான் 30 கிலோ உடல் எடையை சீக்கிரம் குறைக்க முடிந்ததாக கூறப்படுகிறது. உடல் எடையை கஷ்டப்பட்டு குறைத்தற்கு பலனாக அவருக்கு   மாநாடு திரைப்படம் வெளி வந்து சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த அவருக்கு நிம்மதியைக் கொடுத்தாம்.