பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக நடிகர் சிம்பு – வாங்கயுள்ள மிகப்பெரிய தொகை எவ்வளவு தெரியுமா.?

simbu
simbu

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒரு நிகழ்ச்சி மக்கள் மத்தியில் வெற்றி பெற்றுவிட்டால் போதும் உடனே அடுத்த அடுத்த சீசனை ஆரம்பித்து வெற்றி மேல் வெற்றியை கண்டு வருவது வழக்கம் அந்த வகையில் இப்பொழுது விஜய் டிவி கையில் வைத்திருப்பது குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ்.

இது இரண்டுமே விஜய் டிவிக்கு நல்ல டிஆர்பி ரேட்டை எகிற வைக்கிறது அதனால் சீசன் சீசன்னாக எடுத்து வருகிறது அதிலும் குறிப்பாக பிக்பாஸ் அதிகப்படியான மக்களைக் கவர்ந்து உள்ளதால் வெற்றிகரமாக 5 சீசன் களை வெகுவிரைவிலேயே முடித்துள்ளது. தற்போது பிக்பாஸ் அல்டிமேட்  என்ற நிகழ்ச்சியையும் நடத்தி வருகிறது.

இதை நீங்கள் இருபத்தி நான்கு மணி நேரமும் பார்க்க முடியும். இந்த நிகழ்ச்சியையும் உலகநாயகன் கமலஹாசன் தான் சீரும் சிறப்புமாக நடத்தி வந்தார் ஆனால் நடிகர் கமல் கையில் தற்போது இரண்டு திரைப்படங்கள் இருப்பதால் வேறு வழியில்லாமல் அதில் நடிக்க வேண்டியதால் கவனம் செலுத்துவதற்காக  பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி உள்ளார்.

இதனை அடுத்து புதிய தொகுப்பாளராக நடிகர் சிம்பு களம் இறங்கியுள்ளார். இந்த வாரம் வருகின்ற சனி, ஞாயிறு ஆகிய தேதிகளில் அவர்தான் தொகுத்து வழங்க உள்ளார் இதற்கான புரோமோ கூட தற்போது வெளிவந்துள்ளது இப்படி இருக்கின்ற நிலையில் ஒரு சூப்பர் தகவலும் வெளியாகி உள்ளது.

அதாவது நடிகர் சிம்பு ஒரு நாளைக்கு தொகுத்து வழங்குவதற்கு மட்டுமே சுமார் ஒரு கோடி சம்பளம் வாங்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனை அறிந்த ரசிகர்கள் படங்களில் நடிப்பதை விட இதில் ஒரு மணி நேரத்துக்கு வந்து போனாலே ஒரு கோடி என்பது மிகப்பெரிய விஷயம் என கூறிய கமெண்ட் அடித்து வருகின்றனர்.