பார்ட் 2 படத்தை எடுக்க ஆசைப்படும் சிம்பு – அந்த படமா வேண்டவே வேண்டாம் கதறும் ரசிகர்கள்.!

simbu
simbu

நடிகர் சிம்பு ஹீரோவாக அவதாரம் எடுத்த பிறகு தொடர்ந்து காதல் சம்பந்தப்பட்ட படங்களில் நடித்த வெற்றியை கண்டார் இதனால் அப்பொழுது அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உருவாகினார். அப்போது ரஜினி – கமல், அஜித் – விஜய்க்கு பிறகு  நடிகர் சிம்பு பெயர் இருந்தது ஆனால் ஒரு கட்டத்தில் சிம்பு நடித்த படங்கள் தோல்வி படங்களாக மாற..

அவரது மார்க்கெட் சரசரவென அதள பாதாளத்தை தொட்டது அதிலிருந்து மீண்டு வர அவரும் டைம் எடுத்துக் கொண்டார் பல வருடங்கள் கழித்து ஒரு வழியாக சிம்பு உடல் எடையை குறைத்து தனது எண்ணங்களை மாற்றி நல்ல கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் வெற்றி பெற்றன.

இதனால் விட்ட மார்க்கெட்டை ஓரளவு அவர் பிடித்திருக்கிறார். இந்த நிலையில் சிம்புவின் புதிய முடிவால் பலரும் அதிருப்தியில் இருக்கின்றனர் அதாவது முருகன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற திரைப்படம் மன்மதன். இந்தப் படத்தில் பெண்களை கொள்வது போல சிம்பு நடித்திருப்பார் இந்த படம் அப்பொழுது ஓடியது.

இந்த படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்க வேண்டும் என பலரும் கேட்டுக் கொண்டு வந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது சிம்பு தூசு தட்ட ஆரம்பித்திருக்கிறார். மன்மதன் இரண்டாவது பாகம் நடிகர் சிம்புவுக்கு..

50 வது திரைப்படமாக இருக்கும் என கூறப்படுகிறது. தற்பொழுது நல்ல ரூட்டில் ஓடிக்கொண்டிருந்த இவர் திடீரென இது போன்ற முடிவுகள் எடுப்பது மீண்டும் அவர் பழையபடி  வேதாளம் முருங்கை மரம் ஏறியது போல இருப்பதாக பலரும் கூறி வருகின்றனர். இது அவருக்கு சறுக்கலை கொடுக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.