ரசிகர்களுக்காக கேரவனில் இருந்து எழுந்து நின்று வழி அனுப்பிய சிம்பு.! வைரலாகும் வீடியோ

Maanadu
Maanadu

நடிகர் சிம்பு தற்போது சுசீந்திரன் இயக்கிய ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துவிட்டார் இப்படம் ஒரே மாதத்தில் எடுக்கப்பட்டுள்ளது.

அந்த ஒரு மாதத்திலேயே சிம்புவுக்கு பல பிரச்சனைகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில்  அதையெல்லாம் தாண்டி இவர் இந்த படத்தை முழுமையாக முடித்து விட்டார்.

இதனையடுத்து தற்பொழுது மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிம்பு  இந்தப் படத்தை வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் சார்பில் சுரேஷ் காமாட்சி தயாரித்து வருகிறார்.

இப் படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடிக்கிறார். வில்லனாக எஸ். ஜே. சூர்யா நடித்து வருகிறார். மற்றும் இதில் பாரதிராஜா, மனோஜ், பிரேம்ஜி, கருணாகரன், டேனியல் போன்ற பல நட்சத்திரங்கள் இதில் நடித்துக்  கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ஈஸ்வரன் படத்தை முடித்துவிட்டு கேரவன் வேனில் சிம்பு திரும்பியபோது அவரது ரசிகர்கள் வழிமறித்து அவரை காட்டினால் தான் நாங்கள் போகுவோம் என்ற அளவிற்கு ஆர்ப்பாட்டம் செய்து இருந்தார்கள்.

அதற்கு சிம்பு வெளியே வந்து கைகளைக் காட்டி நான் நன்றாகத்தான் இருக்கிறேன் என்று அவர்களை வழியனுப்பி வைத்தார் அந்த வீடியோ காணொளி தற்போது இணையதளத்தில் மின்னல் வேகத்தில் பரவிக் கொண்டு வருகிறது.