ரசிகர்களுக்கு பிரியாணி போட்ட நடிகர் சிம்பு.. வைரலாகும் வீடியோ

simbu
simbu

தமிழ் சினிமாவில் இன்று முன்னணி நடிகராக ஓடிக் கொண்டிருப்பவர் சிம்பு. இவர் கடைசியாக நடித்த மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்த நிலையில் மூன்றாவது ஒரு வெற்றி படத்தை கொடுக்க இயக்குனர் கிருஷ்ணாவுடன் கைகோர்த்து சிம்பு நடித்த திரைப்படம் தான் பத்து தல..

இந்த படம் ஒரு ரீமேக் திரைப்படமாக இருந்தாலும் சிம்பு மற்றும் கெளதம் கார்த்திக், ப்ரியா பவானி சங்கர், கெளதம் வாசுதேவ் மேனன் போன்றவர்கள் இந்த படத்தில் நடிப்பதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்தது. அந்த எதிர்பார்ப்பை குறைய விடாமல் படத்தில் ஒவ்வொரு சீனும் ரசிக்கும்படி..

இருந்ததால் படம் நல்ல வரவேற்பு பெற்று ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதன் காரணமாக படத்தின் வசூலும் அதிகரித்தது. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து சிம்பு அடுத்தடுத்த பல்வேறு படங்களில் கமிட் ஆகிய நடித்து வருவதாக தகவல்கள் உலா வருகின்றன சிம்புவின் வெற்றியால்..

அவருடைய மார்க்கெட் அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் சிம்புவின் ரசிகர்களும் செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகின்றனர் இப்படி இருக்கின்ற நிலையில் ரசிகர்களுக்கு பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சிம்பு அது குறித்து விலாவாரியாக பார்ப்போம்.. நிகழ்ச்சி ஒன்றில் சிம்புவின் ரசிகர்கள் மன்றத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொண்ட நிலையில் பிரியாணி விருந்து கொடுத்துள்ளார் சிம்பு.

மேலும் சிம்பு அவர்கள் தனது கையால் ரசிகர்களுக்கு பிரியாணி போட்ட போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையதள பக்கத்தில் வைரலாகி வருகிறது. இதைப் பார்த்த ரசிகர்கள்  புகைப்படம் மற்றும் வீடியோக்களுக்கு நல்ல கமெண்ட்களை கொடுத்து சிம்புவை வாழ்த்தி வருகின்றனர். இந்த தகவல் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.