தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திர நடிகர்கள் பலரும் தொடர்ந்து தனது சம்பளத்தை ஏத்திய வண்ணமே இருக்கின்றனர் குறிப்பாக விஜய், அஜித், கமல், ரஜினி போன்றவர்கள் அனைவரும் 100 கோடி மேல் சம்பளம் வாங்குவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களைத் தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் இருக்கும் நடிகர்களும் தனது சம்பளத்தை கணிசமாக உயர்த்தி வருகின்றனர்.
அந்த வகையில் நடிகர் சிம்பு மாநாடு, வெந்து தணிந்தது காடு போன்ற படங்கள் அடுத்தடுத்த வெற்றியால் தனது சம்பளத்தை உயர்த்தி இருக்கிறார். தற்பொழுது ஒரு படத்திற்கு 20 முதல் 25 கோடி வரை வாங்குவதாக கூறப்படுகிறது தொடர்ந்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணமே இருப்பதால் அவரது வளர்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் திடீரென புதிதாக கதை சொல்லவரும் இயக்குனர்களிடம் தனது சம்பளத்தை அதிகமாக கேட்டுள்ளார். புதிதாக கதை சொல்ல வருபவர்களிடம் 40 கோடி சம்பளம் கேட்பதால் அனைத்து தயாரிப்பாளர்களும் தெரிந்து ஓடுகின்றனர். கடைசியாக நடிகர் சிம்பு வாரிசு படத்தில் இடம் பெற்ற தீ தளபதி பாடலை பாடினார்.
அப்பொழுது தயாரிப்பாளர் லலித் குமார் எங்களது பேனரில் ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்க அதற்கு சிம்பு 40 கோடி சம்பளம் கேட்க அவர் விலகினாராம். இது போன்று நிறுவனங்களே தெரிந்து ஓடுவதால்.. நல்ல கதைகளையும் சிம்பு தவறவிடுகிறார் என கூறப்படுகிறது.
இப்படியே போனால் சிம்பு மார்க்கெட் சரியா கூட வாய்ப்பு இருக்கு ஏன பலரும் கூறி வருகின்றனர். இதை கேட்ட ரசிகைகள் இதிலிருந்து சிம்பு மீள சின்ன கதையாக இருந்தால் சம்பளத்தை குறைத்துக் கொண்டு நடித்தால் மட்டுமே அவரது மார்க்கெட் உயரும் என பலரும் கூறி வருகின்றனர். பொறுத்து இருந்து பார்ப்போம் என்ன வேண்டும் மானாலும் நடக்கும்..