சிம்புவின் அடுத்த திரைப்படம் OTT யில் ரிலீஸ்.! ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்த திரைப்படம்…

simbu

தமிழ் சினிமாவிற்க்கு வாரிசு நடிகராக அறிமுகமானவர் சிம்பு இவர் தனது சிறிய வயதில் இருந்தே சினிமாவில் நடித்து தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அந்தவகையில் இவர் கதாநாயகனாக காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார்.

இவர் தனது சிறு வயதிலிருந்தே நடிப்பதால் சினிமாவில் எளிதில் பிரபலமடைந்தார் இவ்வாறு பிரபலமடைந்த குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இவரின் சில தவறான விஷயங்களால் இவருக்கு சினிமாவில் இருந்த நல்ல பெயர் அனைத்தும் கெட்ட பெயராக மாறிவிட்டது வயசு கோளாறு என்றுதான் இதை கூற வேண்டும்.

மேலும் ஒரு படத்தில் கமிட்டானால் படப்பிடிப்பிற்கு ஒழுங்காக செல்ல மாட்டார். அதோடு பல படங்களில் வாய்ப்புகள் வந்தாலும் அதனை நல்ல கதை இல்லை என்று கூறி மறுத்து விடுவாராம். இப்படி செய்து வந்ததால் இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் என்று அனைவரும் இவரை வைத்து படம் உருவாக்க பயந்தார்கள்.

எனவே இதன் காரணமாக இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காமல் போனது இந்நிலையில் இவரின் மீது பல சர்ச்சைகளும் எழும்பியதால் சில காலங்கள் சினிமா பக்கமே தலை காட்டாமல் இருந்து வந்தார் இப்படிப்பட்ட நிலையில் தற்போது தான் அனைத்தையும் உணர்ந்து மிகவும் சரியான பாதையில் போய்க் கொண்டிருக்கிறார் என்று கோலிவுட் வட்டாரங்கள் இவரை பாராட்டி வருகிறார்கள்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்தது திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிதாக வெற்றி பெறவில்லை. அதன்பிறகு இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் திரைப் படத்தின் டப்பிங் வேலைகள் நடைபெற்று வருகிறது விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

இதனை தொடர்ந்து இவர் நடிப்பில் தற்போது பெரிதாக எதிர்பார்க்கப்படும் திரைப்படம் ஒன்று ஓடிடி-யில் வெளியாக உள்ளது. அந்தவகையில் நீண்ட வருடங்களுக்கு பிறகு சிம்பு ஹன்சிகாவுடன் இணைந்து நடிக்கும் திரைப்படம் நான் மஹா.  இத்திரைப்படம் விரைவில் OTT-யில் வெளியாக உள்ளது. ஹன்சிகா சிம்புவை காதலித்ததாகவும் பிறகு சில காரணங்களினால் இருவரும் பிரிந்து விட்டதாகவும் தகவல் வெளிவந்தது. அந்த வகையில் தற்போது பல வருடங்களுக்குப் பிறகு இருவரும் ஒன்றாக இணைந்து நடித்துள்ளார்கள் எனவே இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.