பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்த நடிகர் சிம்பு இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என்று கூறியது சிம்புவின் ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்ததோடு மட்டுமல்லாமல் தற்போது சோஷியல் மீடியாவில் மிகவும் ட்ரென்டிங்கான ஒன்றாக இருந்து வருகிறது.
தனது குழந்தை பருவத்தில் இருந்தே சினிமாவில் நடித்து ஒட்டுமொத்த திரைப்பிரபலங்கள் ரசிகர்கள் என அனைவர் மத்தியிலும் தனக்கென ஓர் இடத்தைப் பிடித்தவர் தான் சிம்பு. இவர் வாரிசு நடிகராக சினிமாவிற்கு அறிமுகமானார் குழந்தை நட்சத்திரமாக ஏராளமான திரைப்படங்களில் நடித்து வந்த இவர் காதல் அழிவதில்லை திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக நடிப்பதை தொடர்ந்தார்.
இவரின் பருவ வயதில் வயது கோளாறு காரணமாக மிகவும் கெத்தாக இருந்து வந்ததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் இவரை வைத்து படம் இயக்க தங்கி வந்தார்கள். ஏனென்றால் சிம்பு ஒரு திரைப்படத்தில் நடித்தார் என்றால் சரியான நேரத்தில் படப்பிடிப்பிற்கு செல்ல மாட்டார் அதோடு இவரை வைத்து அந்த திரைப்படத்தை முழுமையாக எடுத்து முடிப்பதற்குள் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்கள் ஒரு வழியாகி விடவேண்டும்.
எனவே திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு இல்லாததால் சில காலங்கள் சினிமாவை விட்டே வெளியேறி விட்டார் சிம்பு. சமீபத்தில் தான் தொடர்ந்து ஏராளமான திரைப்படங்களில் நடித்து வருவதால் அனைவரும் இவருக்கு தேடிவந்த திரைப்படங்கள் நடிப்பதற்கான வாய்ப்புகளைக் கொடுத்து வருகிறார்கள்.
இப்படிப்பட்ட நிலையில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்கு 10 கோடி சம்பளமாக பெற்று வருகிறார். இவர் ஒரு நல்ல ஹீரோவாக சமீபகாலங்களாக வலம் வந்தாலும் அதை விட ஒரு நல்ல மனிதர் என்றுதான் கூற வேண்டும் ஏனென்றால் இவர் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் ஏராளமானோருக்கு உதவி செய்துள்ளார்.
அதில் முதலில் சந்தானம் இவரை தொடர்ந்து மகத் என பலரையும் சொல்லிக்கொண்டே போகலாம் இப்படிப்பட்ட நிலையில் டான்ஸ் மாஸ்டர் சாண்டி சிம்புவைப் பற்றி சிறப்பான தகவல் ஒன்றை கூறியுள்ளார். அதாவது டான்ஸ் மாஸ்டரான சாண்டிக்கு தன்னுடைய திரைப்படத்தின் மூலம் தான் இவரது திறமையை வெளிப்படுத்துவதற்கான சிம்பு வாய்ப்பு கொடுத்தார்.
அதோடு சமீபத்தில் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் சிம்பு பாடிய தப்பு பண்ணிட்டேன் பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த பாடலுக்கு நடனம் அமைத்தவர் சாண்டி தான் இந்த பாடல் குறித்து ஒரு பேட்டியில் சாண்டி கூறுயதாவுது சிம்பு இல்லை என்றால் எனக்கு வாழ்க்கையே இல்லை என குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலை பார்த்த சிம்புவின் ரசிகர்கள் மிகவும் உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.