விளம்பர படங்களில் கலக்கும் நடிகர் சிம்பு.! அதுவும் எந்த மாதிரி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் பார்த்தீங்களா.!

simbu
simbu

குழந்தை நட்சத்திரமாக தமிழ் திரையுலகில் நடிக்க ஆரம்பித்த நடிகர் தான் சிம்பு இவர் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்பு பல திரைப்படங்களில் பலவிதமான கதாபாத்திரங்களை ஏற்று நடித்து தற்பொழுது கதாநாயகனாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

ஒரு கட்டத்தில் சிம்பு தனது உடல் எடையை அதிகரித்து பார்ப்பதற்கு அடையாளமே தெரியாமல் இருந்தார் பின்பு பட வாய்ப்புகள் எதுவும் கிடைக்காத நிலையில் மிகவும் கஷ்டப்பட்டு தனது உடல் எடையை குறைத்துவிட்டு தற்போது தொடர்ச்சியாக பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.அந்த வகையில் இவர் உடல் எடை குறைத்து நடித்த திரைப்படம் என்றால் அது ஈஸ்வரன் திரைப்படம் தான் இந்த திரைப்படம் இவரது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதைத் தொடர்ந்து இவர் பல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார்.

அந்த வகையில் பார்த்தால் இவர் தொடர்ச்சியாக இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் மாநாடு திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வந்ததை நாம் பார்த்திருப்போம்.

இதனைத்தொடர்ந்து இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் சிம்பு 15 வயது சிறுவனாக நடித்துள்ளாராம் சமீபத்தில் இந்த திரைப்படத்தில் இருந்து வெளியான ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் அனைத்தும் சமூக வலைதளங்களில் இவரது ரசிகர்கள் மத்தியில் காட்டு தீ போல் பரவியதை நாம் பார்த்திருப்போம்.

இந்நிலையில் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் வகையில் இவரது வீடியோ காணொளி ஒன்று இணையத்தில் கசிந்துள்ளது.ஆம் அதில் நடிகர் சிம்பு இணைய வழி ஆடை வர்த்தக நிறுவனத்தின் விளம்பர படம் ஒன்றில் நடித்துள்ளார் செம ஸ்டைலிஷான உடையில் அவர் நடித்துள்ள வீடியோ காணொளி இவரது ரசிகர்கள் மத்தியில் மிக வேகமாக வைரலாகி வருகிறது.