actor simbu latest news: தனது சினிமா வாழ்க்கையில் பெரும் சர்ச்சையை மட்டுமே ஏகத்திற்கு சந்தித்த ஒரு நடிகர் என்றால் அது லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு தான் இவர் திரை உலகில் பல்வேறு வகையில் பிரச்சனைகளை சந்தித்தது மட்டுமல்லாமல் சர்ச்சையில் சிக்கி சின்னா பின்னமாகி வந்தவர்.
என்னதான் திரை உலகில் சர்ச்சை நாயகனாக வலம் வந்தாலும் அவருக்கு என்று ஒரு தனி ரசிகர் கூட்டமே உள்ளது. இவ்வாறு ஆரம்பத்தில் காதல் திரைப்படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கண்ணனாக வலம் வந்த நமது சிம்பு தற்சமயம் நடித்த பல்வேறு திரைப்படங்களும் தோல்வியை சந்தித்தன.
அதுமட்டுமில்லாமல் திரை உலகில் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதன் காரணமாக பலரும் சிம்புவை வைத்து புதிய படம் இயக்கவே பயந்தார்கள் இதன் காரணமாக விருதுநகர் திரைப் படத்தில் நடிக்காமல் இருந்து வந்த சிம்பு சமீபத்தில்தான் செக்க சிவந்த வானம் வந்தாராஜாவாதான்வருவேன் போன்ற திரைப்படங்கள் மூலம் ரீஎன்ட்ரீ கொடுத்தார்.
அந்த வகையில் நடிகர் சிம்பு குண்டாக இருக்கும் பொழுது ஒரு நாளைக்கு ஐந்து பிரியாணி சாப்பிட்டதாக செய்திகள் வெளியாகின ஆனால் தற்போது அவருடைய உடல் எடையை குறைப்பதற்காக குடி பழக்கத்தை நிறுத்தி விட்டாராம்.
இவ்வாறு நடிகர் சிம்பு தன்னுடைய குடி பழக்கத்தை விட்டு சுமார் ஒரு வருடம் ஆயிற்று என சமூக வலைதள பக்கத்தில் தெரியவந்துள்ளது. அந்த வகையில் சமீபத்தில் ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய மாநாடு படக் குழுவினருடன் கலந்துரையாடியுள்ளார் நமது சிம்பு.
அப்போது நான் குடி பழக்கத்தை எலிப்பாட்டு ஓராண்டுக்கு மேல் ஆகிவிட்டது என கூறி உள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் பிரேம்ஜி உடன் இருந்தும் கூட குடிக்காமல் இருந்தது மிகப் பெரிய விஷயம் தான் என பலர் கூறி உள்ளார்கள்.